சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவ்டேகர் கூறியதாவது: அடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே நீட்தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒருமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள். இனி வேறு மாநிலங்களில், தமிழக மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை எற்படாது.
மாநில பாடத் திட்டத்தில் இருந்தும் நீட்தேர்வுக்கு கேள்விகள் இடம்பெறும். தமிழில் கேள்வி கேட்க, நல்ல மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்பிவைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகும்.
திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடுசெல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும். மாதம் ரூ.1 லடசம்வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவிநிதி வழங்கப்படும். தமிழகத்தில் கேந்த்ரியா வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக துவங்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.