மாலத்தீவு நாட்டிற்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்த மோடி

காங்கிரஸ் மன்மோகன்சிங் ஆட்சியின் பத்து ஆண்டு கால வெளியுறவுத்துறையின் தோல்வியால் இன்றுவரை பிரச்சனையை சந்திக்கும் இந்தியா….. சரி கட்டி கொண்டு இருக்கிறது மோடி அரசாங்கம்……..

மாலத்தீவு, வாஜ்பாய் ஆட்சிவரை இந்தியாவின் சொல்படி நடக்கும் இந்திய பெருங்கடல் உள்ள ஒருகுட்டி தீவு நாடு…இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளால் 1988 ல் ஏற்பட்ட பிரச்சினையின்போது விமானப்படை மற்றும் ராணுவத்தை அனுப்பி மாலத்தீவை காப்பாற்றியது இந்தியா….

அதன் பிறகு இந்தியா தான் அந்த நாட்டிற்கு பாதுகாப்பு அளித்துகொண்டு இருந்தது….. இந்தியாவின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அந்த நாட்டிற்கு கொடுக்கப்பட்டது அது மட்டுமல்லாமல் இந்தியவிமானப்படை வீரர்களும் அங்கே உள்ளனர்…..

இது மட்டுமல்லாமல் ராணுவ மட்டும் கப்பல் படை உதவிகளும் உண்டு….. இந்தியாதான் அந்த நாட்டிற்கு எல்லாமே…. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் எல்லாம் தலைகீழாகமாறியது……

காங்கிரஸ் ஆட்சியில் சீனாவை இந்திய பெருங்கடல் பகுதியில் அனுமதித்தது மட்டுமல்லாமல் மாலத்தீவில் சீனா நுழைந்து முழுஆதிக்கம் செலுத்துவதை வேடிக்கை பார்த்து கொண்டுடிருந்தது……

இந்தியாவில் நடந்த பல வீனமான காங்கிரஸ் ஆட்சியை சரியாக பயன்படுத்திக்கொண்டு மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது சீனா… (காங்கிரஸ் மன்மோகன்சிங் ஆட்சியில் உள்நாட்டிலேயே ஒழுங்காக கவனம் செலுத்த இயலவில்லை இதற்கிடையில் எங்கே வெளியுறவுத் துறையில் கவனம் செலுத்த??)

சீனா வின் ஆதிக்கம் தொடங்கியதும் மாலத்தீவின் போக்கு கொஞ்சம்கொஞ்சமாக மாறத் தொடங்கியது……..
மாலத்தீவு கடற்பரப்பில் சீன கடற்படை கப்பல்கள் வர தொடங்கியது……இந்திய நிறுவனங்கள் முதல் தொழிலாளர்கள் விசா என மறைமுகமாக கட்டுபாடுகளை தொடங்கியது மாலத்தீவு….

சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் எதிர்கட்சி தலைவர்கள் என பல பேரை கைது செய்தார் தற்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன்……

இதற்கிடைய இந்தியா கொடுத்த விமானப்படை ஹெலிகாப்டர்களை திருப்பிகொண்டு போக சொல்லியது மாலத்தீவு அரசு….. இந்தியா கொடுக்க வந்த சிறிய ரக விமானப்படை விமானத்தையும் பெற விருப்பம் இல்லாமல் இருந்தது…….

அங்கே இருக்கும் விமானப்படை வீரர்களின் விசா ஜூன் ஜூலை மாதங்களில் முடிவடைகிறது.. அதைநீடிக்கும் எண்ணமும் இல்லாமல் இருந்தது…….இதற்கு எல்லாம் சீனாவின் ஆதரவு இருக்கிறது என்ற அகம்பாவத்தில் ஆடியது மாலத்தீவு…….ஜூன் முதல் வாரத்தில் ஐநா பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினர் தேர்தல் நடந்தது…..
15 உறுப்பினர்களை கொண்டது ஐநா பாதுகாப்பு சபை…..

அதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா நிரந்தர உறுப்பினர்கள்….. இந்த 5 நாடுகளுக்கு தான் வீட்டோ அதிகாரம் உள்ளது……மீதி உள்ள 10 தற்காலிக இடங்களுக்கு ஒவ்வொருவருடமும் 5 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்… தற்காலிக உறுப்பினர்களின் ஆயுட்காலம் 2 வருடம்……

5 இடங்களில் ஒன்று ஆப்ரிக்கா, ஒன்று தென் அமெரிக்கா, 2 ஐரோப்பிய யூனியன் மற்ற ஒன்று ஆசிய பசிபிக் பகுதிக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது…மற்ற இடங்களுக்கு போட்டியின்றி நாடுகள் தேர்வுசெய்யப்பட்டது….
ஆசிய பசிபிக் பகுதிக்கு மாலத்தீவு மற்றும் இந்தோனேசியா நாடுகள் போட்டியிட்டது…….

இந்தோனேசியா ஏற்கனவே தற்காலிக உறுப்பினராக இருந்த நாடு… மாலத்தீவு இதுவரை உறுப்பினராக இருந்ததில்லை…..

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை மாலத்தீவு தான் அந்த தேர்தலில் வெற்றி பெறும் நிலை இருந்தது.. காரணம் இந்தியா வின் ஆதரவு மாலத்தீவுக்கு தான் என்ற நிலை இருந்தது….

ஆனால் மாலத்தீவோ தனக்கு நிரந்தர உறுப்பினரான சீனாவின் ஆதரவு இருக்கும் தைரியத்தில் தனதுபோக்கை மாற்ற தொடங்கியது…கொடுத்த ஹெலிகாப்டர்களை திருப்பிகொண்டு போக சொல்லியது.. விசா கட்டுபாடு என பல விதத்தில் பிரச்சினைகளை உருவாக்கியது…

மாலத்தீவின் போக்கை பேச்சுவார்த்தை சரி கட்ட முயற்சித்து இந்தியா….ஆனால் சீன ஆதரவ நிலைப்பாடு உள்ள மாலத்தீவு அதிபர் சீனா ஆதரவு இருக்கும் தைரியத்தில் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை…….

அமைதியாக இருந்தது இந்தியா…….ஐநா பாதுகாப்பு சபை தேர்தல்க்கு முன்பு இந்தோனேசியா சென்றார் பாரத பிரதமர் நரேந்திரமோடி………அங்கே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகயதாகியது. ஆனால் இந்த சுற்றி பயணத்தின் நோக்கமே ஐநா பாதுகாப்பு சபை தேர்தலில் இந்தோனேசியா நாட்டிற்கு ஆதரவு என்பதை உறுதிபடுத்தவே அமைந்தது..

அதற்கு கைமாறாக இந்தோனேசியாவின் சபங் துறைமுகத்தை மேம்படுத்தி இந்திய கடற்படை அதை தளமாக உபயோகிக்க அனுமதி அளித்து ஒப்பந்தம் போடப்பட்டது. இயற்கையாகவே ஆழம் மிகுந்த கடற்பகுதி என்பதால் நீர்மூழ்கி கப்பல் வரை கொண்டு செல்ல முடியும்……இந்தியா எங்களுக்கு வாக்களிக்கும் என்று ஐநா பாதுகாப்பு சபை தேர்தலுக்கு முன்பு மாலத்தீவு சொல்லி கொண்டது. ஆனால் இந்திய அரசின் சார்பாகவோ வெளியுறவுத்துறை சார்பாகவோ எந்த அறிக்கையும் வரவில்லை.

அமைதியாகவே இருந்தது இந்தியா ….கடைசியாக தேர்தலில் இந்தோனேசியா 144 வாக்குகளும் மாலத்தீவு 46 வாக்குகளும் பெற்று இந்தோனேசியா அமோக வெற்றி பெற்று பாதுகாப்பு சபை உறுப்பினர் ஆக போகிறது….

எதிர்த்து வாக்களித்தது மட்டுமல்லாமல் மாலத்தீவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கவும் செய்தது இந்தியா……இது மோடி அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையின் மிக பெரிய வெற்றி ஆகும்..நிரந்தர உறுப்பினரான சீனாவால் கூட மாலத்தீவை வெற்றி பெற வைக்க இயலவில்லை….

தோல்விக்கு பிறகு இப்போது மாலத்தீவு தானாக இறங்கி வந்து விமானப்படையினர் ஹெலிகாப்டர்கள் விமானங்கள் விசா போன்ற பிரச்சனைகள் பேசி தீர்ப்போம் என்று கூற தொடங்கி விட்டது….

இடையில் பத்து வருடம் ஆண்ட காங்கிரஸ் உள்நாட்டில் மட்டும் அல்ல நமது வெளியுறவுத்துறை கொள்கைகளிலும் குட்டைய குழப்பி வைத்து விட்டு சென்றுள்ளது……

தொடரட்டும் மோடியின் வெளியுறவுத்துறை கொள்கை வெற்றிகள்…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...