கேரளம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைப்பதே கட்சியின் பிரதான இலக்கு.
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு, பாஜகவினருக்கு எதிராக அரசியல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.
இருப்பினும், பாஜக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கன்னூரில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் 84 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.சித்தாந்தத்தை அடிப்படையாக வைத்து அரசியல் வன்முறைகள் நிகழ்வ தில்லை. இந்தப்படுகொலையை மாநில அரசு ஊக்குவிக்கிறது.
வன்முறைக்கு வன்முறையே பதிலடி என்று பாஜக கருதவில்லை. ஆனால், வளர்ச்சிமூலம் அவர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும் என்று நம்புகிறோம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில், ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசில் ஒருஊழல் புகாரைக்கூட எதிர்க்கட்சிகளால் கூற முடியாது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் காட்டிலும் வெளிப்படையான நிர்வாகம் இந்த ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் நமதுநாட்டின் மீதான மதிப்பு அதிகரித்துள்ளது. மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது கிடைக்கும் சிறப்பான வரவேற்பு அவருக்கும், பாஜகவுக்கும் மட்டும் உரித்தானதல்ல. தேசத்தில் வசிக்கும் 125 கோடி மக்களுக்கானது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கட்சியினர் அயராது உழைக்க வேண்டும் என்றார் அமித் ஷா.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.