அமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம்

பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. தேசியதலைவர் அமித் ஷா 9-ந்தேதி சென்னை வருகிறார். அன்றையதினம் சென்னை விஜிபி.யில் நடைபெறும் தேர்தல்தயாரிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

 

இது தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் தாமரைமலராது என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சி இருக்கும். இன்று இருக்கும் சவாலான சூழ்நிலையில் அடிமட்டத்தில் இருந்து எப்படி கட்சியை எடுத்துசென்று கொண்டு இருக்கிறோம் என்பதை எங்கள் தலைவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

எங்கள் கட்சியில் 5 வாக்குச் சாவடியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை மட்டும்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற அழைத்து இருக்கிறோம். கூட்டத்தை கூட்டுவது எங்கள்நோக்கம் அல்ல. இது கட்சி ரீதியான, அமைப்பு ரீதியான கூட்டம்தான். அரசியல் ரீதியான கூட்டம் அல்ல.

அமைப்பு ரீதியான விவாதங்களும், கலந்துரையாடல்களும் மட்டும்தான் இதில் இருக்கும். அமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம். அதன் வெளிப்பாடுதான் இந்த நிகழ்ச்சி.

 

நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒருவழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் 11 பேர் இடம்பெற்று இருக்கின்றனர். வழிகாட்டுவதற்கும், கொள்கை ரீதியாக முடிவை எடுப்பதற்கும், ஆலோசிப்பதற்கும் இந்தகுழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

 

 

இந்த குழுவுடன் அமித்ஷா 2 மணிநேரம் கலந்து பேசுகிறார். அதன்பின்னர், சகோதர அமைப்புகளை சார்ந்த சிலதலைவர்களுடன் சின்ன சந்திப்பு இருக்கிறது.

 

நாடாளுமன்ற தேர்தல் வழிகாட்டுதல்குழு தமிழக அரசியலை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பார்கள். எதிர்க் கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது? என்ற கலந்துரை யாடலுக்கு பின்பு வியூகங்கள் அமைக்கப்படும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...