அடுத்து இன்னொரு அரைகுறை ஆய்வை வைத்து சேறு தூற்ற ஆரம்பித்து விட்டார்கள். ஸ்விஸ் வங்கிகளில் இந்தியாவிலிருந்து வந்த பணம் 2016 ஆம் ஆண்டு இருந்ததை விட 2017 ஆம் ஆண்டு 50% அதிகரித்திருக்கிறதாம். அதாவது 2017 ஆம் ஆண்டு 7000 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
ஆகவே கறுப்புப்பண ஒழிப்பு தோல்வி அடைந்து இட்டது என்று. முதல் விஷயம் ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்வது சட்டவிரோதம் கிடையாது. இந்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.சென்ற வருடம் முதலீடு அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் மூன்று வருடங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி வருடத்திற்கு இரண்டரை லட்சம் டாலர் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பலாம் என்று கட்டுப்பாட்டை தளர்த்தியதே. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியபோது நிறைய இந்திய நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை ஐரோப்பாவில் செய்தன. அதனால் இந்த உயர்வு என்கிறார்கள்.
மேலும் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக சுவிஸ்ஸில் பதுக்குபவர்கள் நேரடியாக அப்படி செய்வதில்லை; கேய்மென் தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகள் வழியாகத்தான் செய்வார்கள். அப்படி செய்பவர்களின் பணம் கேய்மென் தீவு, மொரிஷியஸ் ஆட்கள் செய்த முதலீடு என்று கணக்கில் வருமே தவிர இந்தியாவில் இருந்து வந்த பணம் என்ற கணக்கில் வராது.
இப்போதைய மத்திய அரசு ஸ்விஸ் அரசோடு ஸ்விஸ் வங்கிகளில் பணம் போடும் இந்தியர்களின் தகவல்களை 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அளிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மேலும் இதுவரை பத்தொன்பதாயிரம் கோடி வெளிநாட்டு கறுப்புப்பணம் கண்டுபிடிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குகள் நடந்து வருகிறது.
2014 ஆம் ஆண்டுக்கு முன் மோதி கறுப்புப்பணம் பற்றிப் பேசியபோது இது மாதிரி எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆகவே அவர் சர்வதேச பொருளாதார நிபுணர்கள், நிறுவனங்கள் அளித்த குத்துமதிப்பான மதிப்பீடுகள் அடிப்படையிலேயே பேச வேண்டியிருந்தது. மாறிய சூழ்நிலையைக் கணக்கில் கொள்ளாமல், அதே மாதிரி பேசி இப்போதைய அரசைக் குற்றம் சொல்கிறேன் என்று சொன்னால் அது சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கும்.
2019 பாராளுமன்றத் தேர்தல் வரை இது போன்ற அரைகுறை ஆய்வுகள் தொடர்ந்து வரும். அடுத்த ஒரு வருடத்துக்கு இந்தியா பற்றி வெளிநாட்டு ஆய்வுகள் என ஊடகங்கள் எதைப் பரப்பினாலும் மிகவும் யோசித்து விட்டு நம்புங்கள்.
– ஜெகநாத் ஸ்ரீநிவாசன்
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.