அமித்ஷா கூறியதைதான் அப்படியே மொழி பெயர்த்தேன்

அமித்ஷா கூறியதை நான் அப்படியே மொழி பெயர்த்தேன். நான் திருத்திக்கூறியதாக கூறுகிறார்கள் என்று பாஜக. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
 

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. சிலருக்கு அச்சம் உள்ளது. இதற்கு முன்பு திமுக.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது விவசாய நிலங்கள் 3,800 எக்டேர் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் 400 எக்டேர்தான். அவ்வாறு கையகப்படுத்தப் படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு நிலம் அளிக்கும் விவசாயிகள் நிர்க்கதியாக விடப்பட மாட்டார்கள். விவசாயிகள் அந்ததிட்டத்துக்கு எதிராக செயல்பட வில்லை. ஒரு சிலரை தூண்டிவிட்டு தி.மு.க. மற்றும் சமூகவிரோத சக்திகள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறது. இந்ததிட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் தூங்கிய தமிழகஅரசு, இந்த திட்டத்தில் விழித்துக் கொண்டுள்ளது. அரசு திட்டங்களுக்கு எதிராக பிரச்சனையை கிளப்புபவர்கள், அவர்களுக்கு பண உதவிசெய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். 

பா.ஜ.க. தேசியதலைவர் அமித்ஷா கூறியதை நான் அப்படியே மொழி பெயர்த்தேன். நான் திருத்திக் கூறியதாக கூறுகிறார்கள். நான் வழக்கத்தில் உள்ளதைத் தான் கூறினேன். சிறு நீர்ப்பாசன திட்டம் என்றுதான் தெரிவித்தேன். ஆனால் அதை தவறாக கூறுகிறார்கள். இதுகுறித்து வலைதளங்களில் தவறாக பரப்புகிறார்கள். அதற்கு தி.மு.க. பண உதவி செய்கிறது. இவ்வாறு கூறினார்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...