என்னைப் பொறுத்தவரை தமிழகமக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்

அதிமுக-பாஜக உறவு தாய்குழந்தை உறவுபோல் இருப்பதாக நான் சொல்ல வில்லை என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தர ராஜன், “ஜிஎஸ்டியில் அதிக வருமானம் கிடைத்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஜி.எஸ்.டி திட்டத்தை எதிர்த்த புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி கூட அத்திட்டத்தின் மூலம் 1,400 கோடி ரூபாய் வருமானம் கிடைத் திருக்கிறது என சொல்லியிருக்கிறார்.

எவ்வளவு பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. என்னைப் பொறுத்தவரை தமிழகமக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். இன்னும் ஓராண்டுக்குள் பல நல்லதிட்டங்கள் வரவிருக்கின்றன. நல்ல திட்டங்களை நாம் எதிர்பார்க்கவேண்டும்.

அதிமுக-பாஜக உறவு தாய்குழந்தை உறவு போல் இருப்பதாக நான் சொல்லியதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருக்கின்றன. நான் அப்படி சொல்லவில்லை. ஒரு அமைச்சர் அப்படி சொல்லியதாக என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்தியில் பாஜக ஆட்சிசெய்கிறது, மாநிலத்தில் அதிமுக ஆட்சி செய்கிறது. உறவுசுமுகமாக இருந்தால் தான் நல்ல திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர முடியும் என்று தான் நான் கூறினேன்.

ஏனென்றால், கூட்டணி கட்சியாக காங்கிரஸுடன் திமுக இருந்த போது கூட தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டுவர முடியவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சியாக இல்லாத போதும் கூட நல்ல உறவை மேம்படுத்திக் கொண்டால் மக்களுக்கான நல்லதிட்டங்கள் வரும் என்றுதான் நான் சொன்னேன்” என தமிழிசை தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...