விரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு !

திரு.வாஜ்பாய் என்றவுடன் பலருக்கும் அவருடைய பல சிறப்பாம் சங்கள் நினைவிற்கு வரலாம்.அவருடைய SHARP REFLEXES என்னை மிகவும் கவர்ந்தது உண்டு.

விரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு !

* ஒரு முறை திரு.ராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது,பா.ஜ.க.கூட்டம் ஒன்றில் திரு.வாஜ்பாய் அவர்கள் கலந்துக் கொண்டார்.

அவருக்கு முன்னால் பேசிய பலரும் பேசும் போது, " எதிர்கால பிரதமர் வாஜ்பாய் அவர்களே " என்று விளித்து பேசினார்கள்.

திரு.வாஜ்பாய் அவர்கள் பேசும் போது கூறினார் : " இங்கு எனக்கு முன்னால் பேசிய பலர் என்னை எதிர்கால பிரதமர் என்று விளித்து பேசினார்கள்.நான் எப்படி பிரதமர் ஆக முடியும்,என் தாத்தா பிரதமராக இருந்ததில்லை,அம்மா பிரதமராக இருந்ததில்லை,குறைந்த பட்சம் எனக்கு விமானம் ஓட்ட தெரியுமா என்றால் அதுவும் இல்லை,நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன்.." என்றாரே பார்க்கலாம், எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் பிடித்தது !

* திருமதி பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார் : " Pakistan is incomplete without Kashmir.அதாவது காஷ்மீர் இல்லாது பாகிஸ்தான் முழுமை பெறவில்லை என்று.

அப்போது எதிர்கட்சியில்தான் திரு.வாஜ்பாய் இருந்தார்.

அவர் கூறினார்." If Benazir Bhutto feels that Pakistan is incomplete without Kashmir,let me make it very clear to her that India is incomplete without Pakistan ".

காஷ்மீர் இல்லாது பாகிஸ்தான் முழுமை பெறவில்லை என்று திருமதி பெனாசிர் பூட்டோ கூறுவாரேயானால் நான் அவருக்கு தெளிவுப்படுத்துகிறேன்,பாகிஸ்தான் இல்லாது இந்தியா முழுமை பெறவில்லை !

* ஒரு முறை திரு.கருணாநிதி அவர்கள் " திரு.வாஜ்பாய் அவர்கள் நல்லவர்தான்,ஆனால் அவர் இருக்கும் இடம்தான் சரியில்லை " என்றார்.

இது பற்றி திரு.வாஜ்பாய் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது.திரு.வாஜ்பாய் கூறினார் : " திரு.கருணாநிதி கூறுவது எப்படி இருக்கிறது என்றால்,மாம்பழம் நன்றாக இருக்கிறது,ஆனால் அதை கொடுத்த மாமரம் நன்றாக இல்லை என்பது போல "

நன்றி கண்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...