முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந்தேதி காலமானார். அவருக்கு புகழ் அஞ்சலிசெலுத்தும் கூட்டம், நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
அதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். மோடி பேசியதாவது:-
வாஜ்பாய், கடந்த 1996-ம் ஆண்டு ஆட்சி அமைத்த போது, அவரது அரசை ஆதரிக்க எந்தகட்சியும் முன்வரவில்லை. அதனால், 13 நாட்களில் ஆட்சிகவிழ்ந்தது. இருப்பினும், வாஜ்பாய் நம்பிக்கை இழக்கவில்லை. மக்களுக்காக தொடர்ந்து பாடுபட உறுதி பூண்டார். கூட்டணி அரசு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காண்பித்தார்.
1998-ம் ஆண்டு, துணிச்சலாக அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியாவை அணு ஆயுத நாடாக உயர்த்தினார். அதற்கு அவரது உறுதியான தலைமைதான் காரணம். உலக நாடுகள் நெருக்குதல் கொடுத்தும், அவர் பணியவில்லை. 1999-ம் ஆண்டு கார்கில்போர் வெற்றிக்கு பிறகு, இதே அரங்கில் இருந்துதான் அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வாஜ்பாய், நீண்ட காலமாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். ஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதராக இருந்தார். அவர் ஒரு மகாபுருஷர்.
சாமானியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவர், பெயரில் மட்டுமின்றி, உறுதிப் பாட்டை காட்டுவதிலும் ‘அடல்’ ஆக இருந்தார். சிறந்த நாடாளுமன்ற வாதியாக திகழ்ந்தார். அவர் உத்தரகாண்ட், ஜார்கண்ட், சத்தீஷ்கார் ஆகிய 3 புதிய மாநிலங்களை உருவாக்கிய போது எந்த கசப்புணர்வும் இல்லை. அந்த பணி அமைதியாக நடந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில், வாஜ்பாயின் வளர்ப்புமகள் நமீதா பட்டாச்சார்யா, மருமகன் ரஞ்சன் பட்டாச் சார்யா, பேத்தி நிஹரிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியுஷ் கோயல், ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், ஹர்சிம்ரத் கவுர் பாதல், ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அத்வாலே, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை (அ.தி.மு.க.), குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா (இருவரும் காங்கிரஸ்), டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), டேனிஸ்அலி (ஐக்கிய ஜனதாதளம்), ஜெயபிரகாஷ் நாராயண யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ்), பரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுகட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சந்திரகாந்த் கைரே (சிவசேனா) என முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.