பா.ஜ.க தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் இல.கணேசன் கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவிரிநீருக்காக அதிக அளவில் கூக்குரல் கொடுத்துள்ளது. சாதாரண கட்டத்தில் அணைகள் எந்த நிலையில் இருக்கிறது என்று சோதித்து பார்த்திருக்க வேண்டும். அப்படிசோதித்து பார்த்திருந்தால் முக்கொம்பு கீழணையில் உடைப்பு ஏற்பட்டு இருக்காது.
வறட்சி என்பது ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம். இந்தகாலங்களில் ஏரி, குளங்களை தூர்வார ஆண்டவன் நமக்கு கொடுத்தவாய்ப்பு. அதை ஆட்சியில் உள்ளவர்கள் செய்ய தவறி விட்டார்கள். தற்போது அதைபற்றி குறை சொல்லி எந்த பயனும் இல்லை. ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துகொண்டு ஏரி, குளங்களை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.
கரிகாலன் கட்டிய கல்லணை மீது அதிகநம்பிக்கை உள்ளது. அதன் பின்னர் கட்டிய அணைகள் மீதுதான் நம்பிக்கை இல்லை.கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புக்காக ஐக்கிய அரபு நாடு ரூ.700 கோடி தருவதாக கூறியது. இந்தநிதியை மத்திய அரசு தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதைவிட அதிகமாகவே மத்திய அரசு தர தயாராக இருக்கிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில்தான், எந்த மாநிலத்திலாவது பாதிப்பு ஏற்பட்டு அதற்காக அந்நிய நாட்டு நிதியை பெற்றால் தேசிய கொள்கைக்கு இழுக்கு என்று தடைபோட்டார்.
அந்நிய நாடுகள் அவ்வாறு பணம் தர வேண்டும் என்றால் முறையாக மத்திய அரசிடம் கேட்டு தர வேண்டும். அவ்வாறு கேட்காமல் கொடுக்கும் பட்சத்தில் தனி அமைப்புகள் தவறாக பயன்படுத்தி கொள்ள நேரிடும்.
கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகிறார் என்று தகவல் வருகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. தி.மு.கவில் நடப்பது உள்கட்சி சண்டை இல்லை. உள் குடும்ப சண்டை.
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.