ரபேல் போர்விமானங்கள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிவருவதாக நிதியமைச்சர் ஜெட்லி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தபேட்டி: ரபேல் போர் விமானங்கள் குறித்து காங்கிரசின் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய். ரபேல் ஒப்பந்தம் குறித்து 7 விதமான விலைகளை , பலகூட்டங்களில் ராகுல் கூறியுள்ளார். போர் விமானங்கள் குறித்து பள்ளிக் குழந்தைகள் போல் விவாதம் நடத்தப்படுகிறது. தவறான குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப காங்கிரஸ் சொல்லி வருகிறது.மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கு 9 சதவீத விலை குறைவாக விமானங்கள் கிடைக்கிறது. இது காங்கிரசுக்கு தெரியுமா? பாதுகாப்பு என்பது மிகப் பெரியது. ஒப்பந்தத்தில் அரசு ஏதாவது தவறு செய்துள்ளது என்பதற்கு ஆதாரத்தை காட்டவேண்டும்.சாதாரண விமானத்துடன், அனைத்து வசதிகளும் உள்ள விமானத்தைம் ஒப்பிடமுடியுமா? பயணிகள் விமானத்தையும், ஆயுதம் தாங்கிய விமானத்தையும் ஒப்பிட முடியுமா?
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் ஒப்பந்தத்தை தாமதபடுத்தினர். இதற்கு அவர்கள் எந்தபதிலும் கூறவில்லை. நமது படையினரின் பலத்தை அதிகரிக்க வேண்டும். நாம் பிரச்னைக்குரிய மண்டலத்தில் உள்ளோம். அனைத்து நேரங்களிலும் மக்களை முட்டாளாக்க முடியாது என்பதை காங்கிரஸ் நினைவில் வைத்துகொள்ள வேண்டும். போர் விமானம் குறித்து இடைத் தரகர்கள் இல்லாமல், அரசுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தம் ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பேசப்பட்ட விலையை குறைக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிர முயற்சி செய்தது. இவ்வாறு ஜெட்லி கூறினார்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.