சமூக வலைதளங்கள் வாயிலாக, கீழ்த் தரமான, உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பவேண்டாம் என பிரதமர் நரேந்திரமோடி பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தனது வாரணாசி தொகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மத்தியில், தலை நகர் டெல்லியில் இருந்தவாறு, காணொலி காட்சிமூலம், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்முடிவில், பாஜகவினர் எழுப்பிய கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், சமூக வலை தளங்களை, கீழ்த்தரமான தகவல்களை பரப்ப ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம் என முதலில் பாஜக.,வினர் தங்களை தாங்களே தயார் படுத்திடும் வகையில் உறுதியேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மேலும், சமூக வலைதளங்கள் வாயிலாக, கீழ்த்தரமான, உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பவேண்டாம்.இந்த வேண்டுகோளை விடுப்பது எந்தகட்சியின் சார்பிலோ, சித்தாந்தத்தின் அடிப்படையிலோ அல்ல , ஒழுக்கமான சமுதாயம் உருவாகிடவேண்டும் என்பதற்குதான்
சமுதாயத்தில், தாங்கள் ஏற்படுத்தப் போகும் மிகப் பெரிய பாதிப்புகளை பற்றி கிஞ்சிற்றும் எண்ணாமல், தவறான தகவல்களை பகிர்வதாக பிரதமர் கூறியிருக்கிறார். அதேசமயம் நாட்டைப் பற்றிய நேர்மறையான செய்திகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மோடி, இந்தியாவின் மாறும் முகத்தை உயர்த்திப்பேசும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுமாறு, அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்திய திருநாடு, தற்போது, வரலாற்றில் இல்லாத முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும், பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.