கிண்டர்கார்டன் பள்ளி விவாதம் செய்யும் ராகுல்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து பொய்சொல்லி வருகிறது. உண்மையை சொல்லப்போனால் 2007ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முடிவு செய்யபட்டதை விட 20 சதவீதம் விலை குறைவாகத்தான் தற்போது ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. எனவே இதில் தனி நிறுவனம் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தவறானது.

ஆனால், தொடர்ந்து காங்கிரஸ் தவறான பிரச்சாரத்தை முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, தேசியபாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.  இந்த ஒப்பந்தம் இருநாட்டு அரசுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இடைத்தரகர்கள் இல்லை.  எந்த விதியையும் கடைபிடிக்காமல் நேரடியாக ஒப்பந்தம் செய்து விட்டதாக பிரதமர் மோடி மீது அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்ட 14 மாதங்கள் கழித்து தான் அது இறுதி செய்யப்பட்டது. இதற்கு ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிக்கும் என்று நம்புகிறேன் .

தேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக இதுபற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 3 அம்சங்களில் குற்றவாளிகள் ஆகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேரத்தை தாமதப்படுத்தியதின் மூலம் தேசப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தினர். விலை மற்றும் நடைமுறையில் பொய்யான தகவல்கள் கூறுகின்றனர். இந்த விவகாரங்களை எழுப்பி, ராணுவ கொள்முதலை மேலும் தாமதப் படுத்துகின்றனர்.

‘ஒரு விமானத்திற்கு 7 விலை’ அருண் ஜெட்லி தனது பதிவில், ‘‘ராகுல்காந்தி ரபேல் விமானவிலை தொடர்பாக பல்வேறு விலையை குறிப்பிட்டுள்ளார். ஜெய்ப்பூரில் பேசும்போது மட்டும் ஒருமுறை ரூ.520 கோடி என்றார். அதன்பின் ரூ.540 கோடி என்றார். டெல்லியில் ரூ.700 கோடி என்றார். ஏப்ரல் மற்றும் மே மாதம் கர்நாடகாவிலும் இதே விலையைத்தான் கூறினார். ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது இதேவிலையை ரூ.520 கோடியாக குறைத்து விட்டார். ஆனால் ராய்ப்பூரில் ரூ.540 கோடியாக உயர்த்திவிட்டார். ஐதராபாத்தில் ரூ.526 கோடி என்று புதிய விலையை நிர்ணயித்து விட்டார்.

இது கிண்டர்கார்டன் பள்ளி விவாதம்போல இருக்கிறது. நான் 500 கொடுத்தேன், நீ 1600 கொடுத்தாய் என்பது போல தான் அவர்கள் கூறுவது இருக்கிறது. இது ராகுல் காந்திக்கு எவ்வளவு குறைவான புரிதல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் உண்மைக்கு எப்போதும் ஒரேபதில்தான். பொய்கள்தான் பல வடிவங்களில் வெளிவரும். ரபேல் போர்விமானம் பற்றிய எந்தவித விவரமும் தெரியாமல் இந்த குற்றச்சாட்டுகளை அவர் முன்வைக்கிறார்

நன்றி அருண் ஜெட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...