நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது, இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். சீனாவின் முதல்காலாண்டு பொருளாதார வளர்ச்சியானது 6.7 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் அதைவிட கூடுதலாகவே வளர்ச்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் ரூ.33.74 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது ரூ.31.18 லட்சம் கோடியாகும். ஆக, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி யானது முதல் காலாண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.இதற்குமுன்பாக கடந்த 2015-16 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில்தான் நாட்டின் பொருளாதர வளர்ச்சியானது அதிக பட்ச அளவாக 9.3 சதவீதத்தைத் தொட்டிருந்தது. அதற்குப்பிறகு நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்தான் நாட்டின் பொருளாதாரத்தில் இந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமை யிலான அரசின் துணிச்சலான சீர்திருத்த நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.