மின்னணு வாகன உற்பத்திக்கு அதிகளவில் முதலீடுசெய்ய வேண்டும்

நாட்டில் மின்னணு வாகனங்கள் உற்பத்திக்கு அதிகளவில் முதலீடுசெய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார். வாகன வசதிகள் குறித்த முதலாவது சர்வதேசமாநாடு, டெல்லியில் இன்று தொடங்கியது. நிதிஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த 2 நாள் மாநாட்டை, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார்

இதற்கு முன்னதாக, அதிநவீன போக்குவரத்து முறைகுறித்த மெய்நிகர் டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார். அப்போது, மஹிந்திரா, ஹீரோ, டாட்டா மோட்டார்ஸ், மாருதிசுசுகி, ஹோண்டா, டயோட்டா உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், தற்போதைய போக்குவரத்து வசதிகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

இதையடுத்து, மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர், எளிதான வாழ்க்கைக்கும், நமதுகிரகத்தைப் பாதுகாக்கவும் முக்கிய காரணியாக வாகன வசதிகள் இருப்பதாகத் தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது தற்போதைய அவசியத் தேவை.

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களும், உற்பத்தியாளர்களும், பேட்டரி தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதில் கவனம்செலுத்த வேண்டும், மின்னணு வாகனங்கள் உற்பத்திக்கு அதிக முதலீடுசெய்ய வேண்டும்.

இந்த துறையில் அதிகளவில் வேலைவாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில், அடுத்த தலைமுறையினருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து முறை என்பது 7 தாரக மந்திரங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்கவேண்டும்.

அதாவது, பொதுவானது, இணைக்கப்பட்டது, ஏற்றுக் கொள்ளத்தக்கது, நெருக்கடி இல்லாதது, சார்ஜ் செய்யப்பட்டது, தூய்மையான, அதிநவீனவசதி கொண்டது என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். இடம்பெயர்வு வசதிக்கான துறையில் அளப்பரிய வாய்ப்புகள் இருக்கிறது, உலகமே பின்பற்றும் வகையிலான போக்குவரத்து புரட்சியை இந்தியா ஏற்படுத்த வேண்டும்.

பின்னர் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் கண்காட்சியைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். கண் காட்சியில் மின்சார கார்கள், ரிக்ஷாக்கள், சைக்கிள்கள் மற்றும் பேருந்துகள் இடம் பெற்றிருந்தன. சனிக்கிழமை வரை நடைபெறும் இந்த மாநாட்டில், சர்வதேச அளவில் போக்குவரத்து முறையில் பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...