ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல்

மேல்மருவத் தூரில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பண்ணைவீட்டில் இருந்து 80 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னையில் கடந்தவாரம் ரன்வீர் ஷாவின் வீட்டில் இருந்து 89 சிலைகள் மற்றும் கோயில் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று அவருக்கு சொந்தமான மேல்மருவத்தூரில் உள்ள பண்ணை வீட்டில் சிலைக்கடத்தல் தடுப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தி சுமார் 80 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ரன்வீர் ஷா, சில இடங்களில் இருக்கும் பழையபங்களாக்களை வாங்கி அதனை பராமரித்து வரும் நிலையில், அந்தவீடுகளிலும் சிலைகளை மறைத்து வைத்திருக்கலாம் என்ற அடிப்படையில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில், வீடு முழுக்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிலைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததால், 80 சிலைகளையும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் பறிமுதல்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்தவாரம் சென்னை சைதாப்பேட்டையில் வீட்டின் பலபகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கற்சிலைகள், அலங்காரத் தூண்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட சிலைகள் பல்வேறு கோயில்களைச் சேர்ந்த மிகப்பழமையான சிலைகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

முன்னதாக சிலைக் கடத்தல் மன்னன் தீன தயாளனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏராளமான கோயில் சிலைகளை கடத்தி தொழிலதிபர் ரன்வீர் ஷாவிடம் விற்றதையும், அவர் அதனை எப்படி பதுக்கி வைத்திருக்கிறார் என்பதையும் வாக்குமூலமாகப் பெற்ற பிறகே, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த அதிரடி சோதனையை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். மாணிக்கவேல், கடத்தல் சிலைகளை வைத்திருப்போர் ஒருமாதத்துக்குள் தங்களிடம் இருக்கும் சிலைகளை திருப்பிக்கொடுத்து விட்டால் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம். தண்டனையில்லை. இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்.

கடத்தல் சிலைகள் என்று தெரிந்தால் அது பற்றி தாமாகவே வந்து தகவல்களை அளிக்கலாம். தகவல்கள் வரவேற்கப்படுகின்றன. சிலைக்கடத்தலில் தொடர்பில்லாதவர்கள் யாருமே பயப்பட வேண்டாம். குற்றமற்றவர்கள் மீது ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்படாது. சிலைக் கடத்தல் தொடர்பாக அறநிலையத் துறையில் மேலும் 9 அதிகாரிகளை ரிமாண்ட் செய்ய வேண்டியுள்ளது என்றும் பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...