பாஜக ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகுறித்து திறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார் என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற வுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் கான்கேர் மாவட்டத்தில் உள்ள நர்கார் பூரில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது-
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்துள்ளது. ஆனால் பாஜக வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே ஆட்சிபுரிந்துள்ளது. இதில் யார் அதிக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறித்து திறந் வெளியில் விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி தயாரா?. மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் சென்று முதல்வர் ராமன்சிங் மக்களை சந்தித்துள்ளார். ஆனால் மாநிலத்திற்கு காங்கிரஸ் அரசு எதையுமே செய்ய வில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான் சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கினார். ராமன் சிங் தான் இதனை வளர்ச்சி பெறச்செய்தார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகமக்களும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ராமன் சிங்கால் பலன் பெற்றுள்ளனர். மாநிலத்தை வளர்ச்சி பெறச்செய்ததில் மத்தியில் ஆளும் மோடி அரசு முதல்வர் ராமன் சிங்குக்கு உறுதுணையாக இருந்தது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.இந்தாண்டு இறுதியில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.