ஜம்முகாஷ்மீர் மாநில நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சித்தேர்தலில், 43 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றிபெற்றுள்ளது. இது கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெற்ற இடங்களைவிட 18 இடங்கள் அதிகமாகும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல், 13 ஆண்டுகள் கழித்து, கடந்த 8-ம்தேதி முதல் 16-ஆம் தேதிவரை, 4 கட்டங்களாக நடைபெற்றது.
மொத்தமுள்ள 75 இடங்களில், பாஜக 43 இடங் களையும், காங்கிரஸ் 14 இடங்களையும், சுயேச்சைகள் 18 இடங்களையும் கைப்பற்றி யுள்ளன. தேசிய மாநாட்டுக்கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் தேர்தலில் போட்டியிடாததால், சுயேச்சைகளின் பலம் ஓங்கி காணப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.
வெற்றிக் கொண்டாட்டம்: காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளிவர ஆரம்பித்ததில் ருந்து, பாஜக முன்னிலையில் இருந்து ந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் காலையிலிருந்தே கொண்டாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
தேர்தல் வெற்றிகுறித்து, கட்சி தலைமையகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித் ததாவது:
இது மக்களுக்கான வெற்றி. எங்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கான வெற்றி. பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு வெற்றிகரமான திட்டங் களுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம். இது கட்சித்தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரது உழைப்பால் பெறப்பட்டுள்ள வெற்றியாகும். தொடர்ந்து மக்களின் நலனுக்காக பாஜக உழைத்து கொண்டே இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.