ஹிந்து கோவில்களில் இல்லை தீண்டாமை

ஹிந்து மத கோவில்களில் தீண்டாமை பாகுபாடு இல்லை .கிடையவே கிடையாது .பல ஹிந்து கோவில்களில் அதிகாரிகளாக தலித்சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் .அதுமட்டும் அல்ல மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் சரி ,பழனி முருகன் கோவில் ,ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலம் கோவில் ,திருச்செந்தூர் முருகன்கோவில் ஆகிய அனைத்து ஹிந்து கோவில்களிலும் பிராமிணனும் தலித்தும் ஒன்றாக நின்று சாமிதரிசனம் செய்ய முடியும்

கோவிலில் வழிபாடுசெய்ய முடியும் .அதாவது தீண்டாமை மற்றும் சாதி பாகுபாடுகள் கிடையாது அறுபத்தி நாயன் மார்களில் மீனவர் ,வணிகர் வேளாளர் ,கடையர் ,வேடர் ஏகாலியர்,  புலையர் ,குயவர் ,இடையர் ,சாலியர் ஆகிய அனைத்து குலம்/ஜாதிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் உள்ளனர் (தற்போது SC ,ST BC ,MBC பிரிவுகளுக்கு நிகர் .அவர்களின் சிலைகள் அனைத்து சைவ கோவில்களிலும் ( கொடிமரம் உள்ள ) உள்ளது .

சிவனுக்கு நிகராக அவர்களுக்கு குரு பூஜைகள் உண்டு .இதைபோன்று அடுத்தமதத்தில் எதிர்பார்க்க முடியுமா ? மத மாற்ற பிரச்சாரங்களுக்கு மட்டும்தான் ஹிந்து மதத்தில் தீண்டாமை மற்றும் ஜாதிப்பிரிவினை உள்ளது என்ற பிறழ் முரண்வாதம் உதவும் .மற்றபடி அது பொருளின்மை வாதங்கள்தான்

இந்தியாவில் கிருஸ்துவர்கள் தீண்டாமையை போற்றுகிறார்கள்.. இந்திய சர்ச்சுகளில் தீண்டாமை உள்ளது..பைபிள் சொல்லாத ஜாதிகள் – கொடுமை கொடுமை இதுதான் கொடுமை தலித்கிருஸ்துவர்கள் ,கிருஸ்துவ நாடார்களுடன் /கிருஸ்துவ வன்னியர்களுடன் /கிருஸ்துவ செட்டியார்களுடன் /கிருஸ்துவ மறவர்களுடன்/கிருஸ்துவ பிள்ளைமார்களுடன் திருமண சம்பந்தம் வைக்க முடியாது முடியவே முடியாது – கிருஸ்துவ நாடார்கள் /கிருஸ்துவ வன்னியர்கள் பெரும்பான்மையானவராக உள்ள சர்ச்சுகளில் தலித் கிருஸ்துவர்கள் உள்ள போகவே முடியாது

.தீண்டாமை கொடுமைதான் .தமிழகத்தில் எத்தனை கிருஸ்துவ மறை மாவட்டங்களின் தலைவர்கள் தலித் கிருஸ்துவர்கள் என்று கணக்கு பார்த்தால் தெரியும் உண்மை ..தலித் கிருஸ்துவர்கள் கிருஸ்துவ திருச்சபைகளில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவம்கேட்டு வீதிகளில் தினமும் போராடுகிறார்கள் .

.அவ்வளவு ஏன் திருச்சி மேலபுதூர் கிருஸ்துவ கல்லறையில் தீண்டாமை தடுப்பு சுவர் – ஆம் தலித் கிருஸ்துவர்களுக்காக – ஆம் வாழும் போது தான் இந்த அவலம் என்றால் கிறிஸ்துவுக்குள் மரித்தாலும் விடாத ஜாதி வெறி. தீண்டாமை வெறி அது மட்டும் அல்ல இம்மானுவேல் சர்ச் – ஆம் இம்மானுவேல் சர்ச் ஆம் இம்மானுவேல் சர்ச் தான் தலித் கிருஸ்துவர்களுக்காக மட்டும் அந்த சர்ச்சுகளில் ஹிந்துக்களின் கருப்பசாமி பாடல்கள் மெட்டுக்களில் (அங்கே இடி முழங்குதே -) கர்த்தர் பாடல்கள் ஒலிக்கின்றன இதற்கு ஹிந்து மனுசாஸ்திரங்கள் காரணமன்று. .செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக கத்தோலிக்க சர்ச் மூடப்பட்டு கிடக்கிறது . வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது ,

தீண்டாமை காரணமாக தலித் கிருஸ்துவர்கள் சர்ச்சுக்குள்ளே வரக்கூடாது என்று வன்னியர், ரெட்டியார் கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். இந்த பிரச்சினையில் முன்னின்று போராடிய தலித் – இனத்தை சேர்ந்த கிருஸ்துவ இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மிக கொடூரமான /கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

தனிக் கல்லறை வழக்கம் கிருஸ்துவர்களிடமும் இருக்கிறது ..கிராமங்களில் தலித் கிருஸ்துவர்கள் சேரிக்குள்தான் வாழ வேண்டும் , சாதி கிருஸ்துவர்களோடு ஊர்த்தெருவில் குடியிருக்க முடியாது. என் உறவினர் குடும்பம் 1895 ம் ஆண்டு ஹிந்து மதத்தில் இருந்து கிருஸ்து மதம் சென்றார்கள் .ஆனால் இன்றுவரை ஜாதி தாண்டி தலித் கிறிஸ்துவர் குடும்பத்தில் திருமண சம்பந்தம் செய்ததில்லை .இதற்க்கு ஹிந்து மதம் காரணம் அன்று . ஆதலால் ஜாதிய வேறுபாடுகளை ,தீண்டாமை வைத்து ஹிந்து மதத்தை இழிவு படுத்த /சிறுமைப்படுத்த/ஏளனங்கள் செய்ய /அவமானங்கள் செய்ய /நக்கல்கள் /நையாண்டிகள் செய்ய முயற்சிக்க வேண்டாம் 

நன்றி செந்தில் சிகாமணி 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...