வல்லபாய் படேல் சிலையை பிரதமராக திறப்பதில் பெருமைகொள்கிறேன். சிலையை நிறுவ திட்டமிட்டபோது நான் பிரதமராவேன் என்று நினைக்க வில்லை.
குஜராத் மாநிலத்தில் உலகிலேயே மிக உயரமான சிலையான இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றியஉரையில், இன்று வரலாற்றில் இந்தியாவிற்கு மிகமுக்கியமான நாள். வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து நான் என்னுடைய உரையை தொடங்குகிறேன். இந்தியா ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமையுடன் இருக்கிறது என்ற உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் பங்கேற்கமுன்வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
ஒற்றுமையான இந்தியாவில் நாம்வாழ்வதற்கு அடித்தளமிட்டவர் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திரத்திற்கு பின்னர் அவர் எடுத்தமுயற்சிகளின் விளைவாகவே இந்தியா இன்று இந்தநிலையில் இருக்கிறது.
ஒற்றுமைக்காக சர்தார் வல்லபாய் படேல் பாடுபடவில்லை என்றால், சிவபக்தர்கள் சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்யமுடியாது.
யோசித்து பாருங்கள், இந்தியர்கள் சிங்கங்களையும், புலிகளையும் பார்க்க விசா எடுத்துச்செல்ல வேண்டிய நிலை இருந்திருக்கும், சோம்நாத் கோவிலில் பூஜை செய்ய சிவபக்தர்களுக்கு விசா தேவைபட்டிருக்கும். மேலும், ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரை பார்க்க விசா எடுக்க வேண்டியதிருக்கும்.
ராகுல் காந்தியின் தாத்தா, ஜவஹர்லால் நேரு சோம்நாத் கோவிலை புனரமைக்க கூட விரும்ப வில்லை. ஆனால், சர்தார் வல்லபாய் படேலே சோம்நாத் கோவிலை புனரமைப்பதற்கு முன்முயற்சி எடுத்தவர். 1026ல் கஜினி முகமதால், சோமநாத் ஆலயம் சூறையாடப்பட்டு அழிக்கப் பட்டது.
நம் சொந்த நாட்டில் உள்ள சிலரே இந்த முன்முயற்சியை ஒரு அரசியல் பார்வையிலிருந்து பார்ப்பதைபார்த்து நாங்கள் பெரிதும் வியப்படைகிறோம், நாங்கள் ஒரு பெரியகுற்றம் செய்துள்ளதைப் போல எங்களை பெரிதும் விமர்சிக்கிறார்கள். நாட்டின் பெரும் நபர்களை நினைவு கூறுவது ஒரு குற்றமா?
ஒற்றுமை சிலை இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றும். உலகிலேயே உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமையவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அந்தக்கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு படேலின் சிலையை நாட்டிற்காக அர்ப்பணிக்கிறேன். இந்ததருணத்தை நான் மிகவும் பெருமையானதாக நினைக்கிறேன். சிலை அமைப்பதற்கான முதல்கல்லை நான் எடுத்துக் கொடுத்தேன். நான் முதல்வராக இருந்த போது படேல் சிலை அமைக்கப்படும் என்று போடப்பட்ட திட்டத்தை நான் பிரதமராக இருக்கும்போது திறந்து வைப்பேன் என்று நினைக்கவில்லை என்றும் பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.