தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7-ந் தேதியும், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வருகிற 28-ந் தேதியும், சத்தீஸ்கரில் வருகிற 12 மற்றும் 20-ந் தேதிகளிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த புதிய கருத்துக் கணிப்பை ஏபிபி.நியூ- லோக்நிதி சிஎஸ்டி.எஸ். எனும் அமைப்பு நடத்தியுள்ளது. நேற்று அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. 160 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும் மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பாஜக. 120 இடங்களிலும் காங்கிரஸ் 95 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4-வது தடவையாக பாஜக. வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சில புதிய கருத்துகணிப்புகளில் பா.ஜ.க., காங்கிரஸ் சம அளவில் வெற்றிவாய்ப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. 52 முதல் 60 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 25 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 இடங்களில் காங்கிரஸ் கட்சி 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக புதிய கருத்துகணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக.வுக்கு 84 இடங்களில்தான் வெற்றி கிடைக்கும் என்று சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் 85 சதவீதம் இடங்களை சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.