மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பு காரணமாக செயல்பட்டதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்பு கொண்டுள்ளார்.
மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல், கடல்வழியாக புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் உயிரி ழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட அஜ்மல்கசாப் என்ற பயங்கரவாதி தூக்கிலிடப்பட்டான் . இந்நிலையில், இது குறித்து இரு நாடுகளிலும் தீவிரவிசாரணை இன்றுவரை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க பாகிஸ்தான் அரசு முனைப்புகாட்டி வருவதாக தெரிவித்தார்.
மேலும், மும்பைத்தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் மண்ணில் இருந்தே சதித் திட்டம் தீட்டப் பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு காரணமாக செயல் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்ரான்கானின் ஒப்புதலுக்கு, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு, நம் ராணுவத்தின் தலைமை தளபதியான, ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான். ஆனால், மும்பை தாக்குதலை யார்நடத்தினர் என்பது, உலகத்தில் உள்ள அனைவருக்கும், ஏற்கனவே தெரியும். அதை, தற்போது அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.