முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதாவை மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் உடனடியாக மூன்றுமுறை தலாக்கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டமசோதா, மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் கொண்டுவந்தது. ஒரு முறை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டால், 6 மாதங்கள் வரை மட்டுமே அச்சட்டம் செல்லுபடியாகும். இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கினால், 6 வாரங்களில் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அதன்படி, அந்த அவசரசட்டத்துக்கு மாற்றான மசோதாவை, மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். பின்னர், அவர் கூறியதாவது:
முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் உடனடி முத்தலாக் நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், சிலர் சிறு விஷயங்களுக்குக்கூட முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்கின்றனர். இன்னும் சிலர், வாட்ஸ்-அப் மூலமாகக்கூட விவாகரத்து கூறுகின்றனர். எனவே, இந்த நடைமுறையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அவசரசட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தபிறகே இந்தமசோதா கொண்டு வரப்பட்டுள்ளது; சசிதரூரின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றார். உடனடியாக விவாகரத்து கூறும் முத்தலாக் நடைமுறையால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு இந்த மசோதா அவசியம் என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.