வங்கிகளின் நிதி ஆதாரங்களை பெருக்க பட்ஜெட்டில் திட்டமிட்ட தொகையை விட கூடுதலாக நிதி ஒதுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அரசின் இந்தமுடிவுக்கு மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் கோரியிருந்தது.
இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “இந்தஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதலாக 41 ஆயிரம் கோடி ரூபாய் நிதியளிக்கப்படும் என அறிவித்தார். இதன்மூலம், இந்தநிதியாண்டில் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் செலுத்தும் தொகை 1.06 லட்சம்கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் அரசு ஏற்கெனவே 23 ஆயிரம்கோடி ரூபாய் செலுத்திய நிலையில், இந்தநிதியாண்டில் மீதமுள்ள மூன்று மாதங்களில் மேலும் 83 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படும். இதன்மூலம் வங்கிகளின் வாராக்கடன் பிரச்னை தொடர்பாக ரிசர்வ்வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளிலிருந்து அவை வெளியே வரும். வாராக்கடன்களை கண்டறியும்பணி ஏறத்தாழ முடிவடைந்து விட்டது.” என்று தெரிவித்தார்.
அதிக கடன் சுமையில் சிக்கியுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு புதிய கடன்வாங்க ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்திய வங்கித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஆறேமாதங்களில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வாராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மத்தியநிதி அமைச்சகம், நடப்பு நிதியாண்டில் சந்தைமூலமாக ரூ. 24,440 கோடியை வங்கிகளின் மேம்பாட்டிற்காக பெறமுடியும் என தெரிவித்தது. மேலும், பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பிச்செலுத்தாமல் இருந்த ரூ. 60,730 கோடி கொடுபடவேண்டிய வாராக்கடன்கள் இப்போது வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த 6 மாதங்களின் நிலைமை மட்டும் தான் என்றும் மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.