உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள காஜிபுரில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இரவு, பகல் பாராமல் உழைக்கும் காவல்காரன் நான்,தங்கள் ஆட்சி காலத்தில் தகுதியற்றவர்களுக்கு எல்லாம் கோடிகளை கடனாக தந்துவிட்டு, ஏழை விவசாயிகளை . தனியார் கந்துவட்டி கும்பல்களிடம் விரட்டிய காங்கிரஸ். இன்று விவசாயிகளின் கடன்களை அடைப்போம் என்று வீராப்பு பேசுகிறது.
கர்நாடகாவில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கூறியது. ஆனால், 800 பேருக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்தது. கேட்டால், விவசாயக் கடனை ரத்து செய்து விட்டோம் என்கின்றனர். இது என்ன மாதிரியான மோசடி!
நம் நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டும். அதற்காக, இரவு, பகல் பாராமல், ஓய்வில்லாமல், நேர்மையாக, இந்த காவல்காரன் உழைக்கிறேன்; இது தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.