மொத்தவிலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. எரிபொருட்கள், மற்றும் உணவுப்பொருட்கள் விலை குறைந்ததே காரணமாகும்.
கடந்த 8 மாதங்களில் மொத்த விலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் 3.80 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 2018 நவம்பர் மாதத்தில் 4.64 சதவீதமாக இருந்தது. 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.58 சதவீதமாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
கடந்தவருடம் 2018ம் டிசம்பர் மாதத்தில் எரிபொருள் மீதான பணவீக்கம் 8.38 சதவீதமாக குறைந்தது இருந்தது. இது நவம்பர் மாதத்தில் 16.28 சதவீதமாக இருந்தது.
சமையல் எரிவாயு மீதான மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்ட பண வீக்கம் 6.87 சதவீதமும், பெட்ரோல் 1.57 சதவீதமும், டீசல் 8.61 சதவீதம் உயர்ந்துள்ளன.
காய்கறிகள் விலை கடந்தவருடம் 2018ம் டிசம்பர் மாதத்தில் 17.55 சதவீதம் குறைந்தது. இது நவம்பர் மாதத்தில் 26.98 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைபோல் வெங்காயம் விலை தொடர்பான பணவீக்கம் 63.83 சதவீதமும், குறைந்தது. இது நவம்பர்மாதத்தில் 47.60 சதவீதமாக இருந்தது.
பருப்புகளின் விலையும் 2.11 சதவீதம் அதிகரித்துள்ளது. முட்டை, இறைச்சி மற்றும் மீன் மீதான பணவீக்கம் 4.55 சதவீதமாக உள்ளது.
இந்தக் காரணங்களால் மொத்தவிலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3.80 சதவீதமாக குறைந்தது.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.