மத்திய புலனாய்வு அமைப்பான, சிபிஐ., யின் புதிய இயக்குனராக, மத்திய பிரதேச முன்னாள், டிஜிபி., ரிஷிகுமார் சுக்லா, 58, நியமிக்கப்பட்டுள்ளார்;.
பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், லோக்சபா, காங்., தலைவர், மல்லிகார்ஜுன கார்கே அடங்கிய ஆனால், முடிவு எடுக்கப்பட வில்லை.புதிய இயக்குனர் பதவிக்கு, முதலில், 81 பேர் பரிசீலிக்க பட்டனர். பின், 31 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இருந்து, ஐந்து பேர் உடைய இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான குழு, நேற்று முன்தினம் மீண்டும் கூடி, ஆலோசனை நடத்தியது.அதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தின் முன்னாள், போலீஸ், டி.ஜி.பி.,யான, ரிஷி குமார் சுக்லா, புதிய, சி.பி.ஐ., இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. ‘அடுத்த, இரண்டு ஆண்டுகளுக்கு, சுக்லா, சி.பி.ஐ.,இயக்குனராக செயல்படுவார்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த, 1983ல் ஐ.பி.எஸ்., எனப்படும், இந்திய போலீஸ் சேவை அதிகாரியாக, மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து, சுக்லா தேர்வு செய்யப்பட்டார். மபி., – டி.ஜி.பி.,யாக இருந்த அவர், சமீபத்தில், மாநில போலீஸ் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.