மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 17 லட்சம் பேரிடம் கோடிக் கணக்கான ரூபாய் பணத்தை சுருட்டியது சாரதா நிதிநிறுவனம். பணத்தை இழந்த அதிர்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர். அரசியல் முக்கியப் புள்ளிகளின் நேரடி தொடர்புடைய இந்த ஊழல் விவகாரம் சிபிஐயின் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில்தான் சிபிஐ அமைப்புக்கு மேற்கு வங்காள அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு முன்னர், இந்த ஊழல் வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த வரும், தற்போதைய கொல்கத்தா மாநகர காவல் ஆணையருமான ராஜீவ் குமாருக்கு சிபிஐ தரப்பில் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால் அவரை கைது செய்யும் நோக்கில் சிபிஐ அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு சென்றபோது, கொல்கத்தா காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பின்னர் விடுவித்தனர்.
இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவியும், மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி, ராஜீவ் குமாருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசை கண்டித்து கடந்த 3 நாட்களாக அவர் தர்ணா போராட்டமும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், சிபிஐ விசாரணையை தடுத்துநிறுத்தும் வகையில் செயல்பட்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மேற்குவங்க அரசின் நடவடிக்கை அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைப்பதாக சாரதா மற்றும் இதர நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட மக்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மைகளை வெளிக்கொடுவரும் முயற்சியாக கொல்கத்தா காவல் ஆணையரிடம் விசாரணை நடத்த சிபிஐ அமைப்பிற்கு தடை விதித்திருப்பது கண்டிக்கத் தக்கதோடு உண்மையை மறைக்கும் விதமாகவும் இது அமைந் துள்ளதாக Chit Fund Sufferers Forum அமைப்பின் தலைவர் அசிம் சட்டர்ஜி தெரிவித்தார்.
மேலும் மமதா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நிதி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட மக்கள் பங்கேற்கும் கண்டன் பேரனி நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் சாரதா, ரோஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு நிதிநிறுவனங்களை நம்பி பணம் இழந்தவர்கள் மட்டும் சுமார் 25 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.