சில நேரம் பட்டைதீட்டாத நல்ல வைரங்கள் நமக்கு தெரிவதில்லை, கூழாங்கற்கள் என்று கடந்துவிடுகிறோம்.
இவரை ஆரம்பத்தில் நான் பெரிதாக மதித்ததில்லை என்பது உண்மை.
கரணம் தப்பினால் மரணம் என்ற பாதகமான சூழ்நிலை,
அசுர பலத்துடன் மலை முழிங்கி திமுக இன்னும் சில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்காக எதையும் செய்ய தயாராய் எதிரில் எதிர்கட்சியாய்!
கூடவே விசுவாசமாய் இருந்தாலும், அதிகார வெறிபிடித்த ராட்ஷச பலத்துடன் மன்னார்குடி கும்பல்!
ஜெ வால் தனக்கு பதில் முதல்வராக அடையாளம் காட்டப்பட்டு அப்போது மத்திய அரசின் நன்மதிப்பையும் பெற்றிருந்த ஓபிஎஸ் ஒருபுறம் அரசியல் செய்ய!
ஜெ மரணத்திற்கு பின்னால் ஏற்பட்ட இந்த அசாதாரணமான சூழலில் அநாயாசமாய், சிரித்த முகத்துடன் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தார் எடப்பாடி!
அரசியல் சாணக்கியர் கருணாநிதியின் மகன் சட்டையை கிழித்துக்கொண்டதை தவிர பெரிதாய் ஏதும் செய்ய இயலவில்லை!
ஓபிஎஸ் வேறொன்றும் செய்ய இயலாத சூழலில், இணக்கமாய் ஆவதைத்தவிர வழியில்லை!
ஆனானப்பட்ட மன்னார்குடி கும்பலை, பெரும் சிரமமின்றி சமாளித்து ஒதுக்கிவிட்டார். அவர்களிடம் பணம் கொஞ்சம் இருக்கும்வரை சிலகாலம் ஆட்டம் போட இயலும் அவ்வளவே!
இதற்கெல்லாம் மத்திய அரசின் ஆதரவும் ஆசீர்வாதமும் வேண்டும் என்பதை நன்றாக புரிந்துகொண்டு வீன் முரண்டு பிடிக்காமல் டெல்லியின் செல்லப்பிள்ளையாகிப்போனார்.
அதன்மூலம் தன் மாநிலத்திற்கு தேவையானவைகளையும் அழகாக கேட்டுப்பெறுகிறார்.
இதெல்லாவற்றையும்விட அவரின் சாணக்கியத்தனம் வெளிப்பட்டது இந்த தேர்தல் கூட்டணி அமைத்ததில்தான். தடுமாறிய பாமகவை முதலில் இழுத்து பூட்டிவிட்டு, தேமுதிகவை தவிக்கவிட்டு தன் நிபந்தனைகளை எந்த சிரமமுன்றி கூட்டணி கட்சிகளை ஒப்பந்தம் செய்யவைத்துவிட்டு, பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்!
இதில் திமுகவின் கைப்பிள்ளை திகைத்துப்போனார்!
அரசு நிர்வாகமாகட்டும், பத்திரிக்கையாளர் சந்திப்பாகட்டும், தனக்கெதிரே அரசியல் செய்பவர்களை சமாளிப்பதாகட்டும் தனக்கே உரித்தான புன்னகையுடனும், கண்டிப்புடனும் அநாயாசமாக அள்ளுகிறார் அனைவர் மனதையும்.
அவரின் வெள்ளந்தியான கொங்கு தமிழ், திராவிட நீட்டிமுழங்கும் பேச்சுகளையே கேட்டு பழகியவர்களுக்கு, புதிது. அதுதான் அவரின் பலமும்.
இப்படிப்பட்ட எளிமையான, திறமையான, அரசியலும் செய்யத்தெரிந்த முதல்வர் போதும்.
திமுகவை டென்ஷனாக்கிய விதத்தில் என் போன்றவர்களையும் அவரை ரசிக்க வைத்துவிட்டார்.
ஒரு பாடல்தான் பாடத்தோன்றுகிறது . . .
கண்ணுபடப்போகுதய்யா சின்னக்கவுண்டரே!
சுத்திப்போட வேணுமய்யா சின்னக்கவுண்டரே!
Courtesy: Chandran Munirathinam
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.