எனக்கு நாடு தான் முக்கியம். மக்களின் நலன் தான் முக்கியம். தேர்தல் அல்ல

‘நானும் காவலாளி’ என்ற இயக்கத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நான் மக்கள்பணத்தை தவறாக பயன்படுத்த வில்லை. நான் எப்போதும் காவலாளியாகவே பணியாற்றுகிறேன். நாட்டின் சொத்தை யாரும் கொள்ளையடிக்காமல் பாதுகாக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு விட்டால் யாரால் நாட்டை கொள்ளையடிக்க முடியும். நான் புகழுக்காக செயலாற்றுகிறேன் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் 2014 க்கு முன்பிருந்தே நாட்டுமக்களுக்கு என்னை தெரியும்.

2014 ல் என் மீது நம்பிக்கை வைத்து மக்கள் ஓட்டளித்தார்கள். மீண்டும் மக்களுக்காக சேவை ஆற்ற எனக்கு வாய்ப்பளிப்பார்கள் என நம்புகிறேன். தற்போது எனக்கு புதியபொறுப்பு வந்துள்ளது. நாட்டின் வளத்தை ஊழல் செய்பவர்களிடம் இருந்து என்னால் முடிந்தவரை முயற்சித்து பாதுகாப்பேன். மக்கள் பங்களிப்பாலேயே கடந்த 5 ஆண்டுகளில் எங்களால் எல்லாம் செய்ய முடிந்தது. எனக்கு நாடு தான் முக்கியம். மக்களின் நலன் தான் முக்கியம். தேர்தல் அல்ல.

பாகிஸ்தான் தானாகவே செத்துவிடும். மோடி தேர்தல்வேலையில் மும்பரமாக இருக்கின்றான் என்று நினைத்துக்கொண்டு தங்களின் விமானப்படையை விரிவுபடுத்தி வருகிறது பாகிஸ்தான். எனக்கு நாடு தான் முக்கியம். தேர்தல் முக்கியமில்லை, நாம் நிறைய முறை இந்தியா பாகிஸ்தான் குறித்து பேசியாகிவிட்டது. பாகிஸ்தான் தானாகவே செத்துவிடும். நாம் அதை கிடப்பில் போட்டுவிட்டு முன்னேறிச் செல்வோம்.

நாட்டின் முதல் பிரதமரான நேரு முதல்முறையாக வறுமையை ஒழிக்க வேண்டும் என்று பேசத் துவங்கினார். அதன் பின்பு அவருடைய மகள் வறுமையோடு ஸ்லோகனையும் கொண்டு வந்தார். அவருடைய மகனும் அதையே தான் செய்தார். வறுமையும் வளர்ந்தது ஸ்லோகனும் வளர்ந்தது. அவருடைய மனைவி 10 வருடங்கள் நாட்டை ஆண்டார். அவரும் அதைத் தான் சொல்கின்றார். அவருடைய மகனும் அதைத்தான் சொல்கின்றார்.

பொய் வாக்குறுதிகளை நம்பாதீர்கள். சிலருக்குத் தெரியும் அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று. முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் வாக்காளர்கள், எதிர்கட்சியினர் கடந்து வந்த பாதையை கவனியுங்கள். அவர்கள் திரும்பத் திரும்ப அவர்கள் பேசும் ரெக்கார்ட் செய்யப்பட்ட வாக்குறுதிகளை நம்பாதீர்கள்.

இனி இந்த நாட்டிற்கு ராஜாக்களும், மகாராஜாக்களும் தேவையில்லை. மக்கள் காவலாளிகளை விரும்புவார்கள் என்று நம்புகின்றேன். சௌகிதார் தரும் உத்வேகம் பரவிவருவதை நான்மகிழ்ச்சியுடன் காண்கின்றேன்.

2014 ல் சொன்னதே இப்போதும் சொல்கிறேன். நாட்டை கொள்ளையடித்தவர்கள் ஒவ்வொரு நயா பைசாவையும் திருப்பி அளித்தாக வேண்டும். 2014 முதல் மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்பி வருகிறோம். 2019 க்கு அவர்கள் சிறை கம்பிக்கு பின்பு தான் இருப்பார்கள்.

காங்கிரஸ் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பொய்யை பரப்பி வருகிறது. நாட்டிற்கு வாரிசு அரசியல் தேவையில்லை. இந்தியாவிற்கு சேவகர்கள் தான் தேவை. மகாராஜாக்கள் அல்ல.

 

நானும் காவலாளிதான் என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலியில் தொண்டர்களுடன் கலந்துரையாடியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.