தேவைப்பட்டால் மேலும் பல கடுமையான சட்டம்

நாட்டின் பாதுகாப்புக்கு, தேவைப்பட்டால் மேலும் பல கடுமையான  சட்டங்களை பாஜக கொண்டுவரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜமுனா கலாரி கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

தேசத்துரோக சட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சித் தெரிவிக்கிறது. ஆனால் பாஜகவோ, நாட்டின் பாதுகாப்புக்காக தேவைப்பட்டால் மேலும் பலகடுமையான சட்டங்களை கொண்டு வரும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை பலவீனப் படுத்தும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது. பயங்கரவாதத் தாக்குதலுக்கு ராணுவம் கடுமையான பதிலடிகொடுத்த போதிலும், நமது பாதுகாப்புப் படையினரின் வீரம் குறித்து கேள்வியெழுப்பியும், எத்தனை பேர் பலியா னார்கள் என்று புள்ளிவிவரம் கேட்டும், காங்கிரஸ் கட்சியும், பிற எதிர்க் கட்சிகளும் அரசியல் செய்கின்றன.

 

துணிச்சலான ராணுவம் தமது தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள் என்று எண்ணி\ கொண்டிருக்காது.
உலகில் 4ஆவது நாடாக, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா சோதனை நடத்தியுள்ளது. இதற்கு, நமதுவிஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முழு சுதந்திரம் கொடுத்ததுதான் காரணம். இதனால்தான் புதுவரலாறு ஏற்படுத்தப்பட்டது.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியை மீண்டும் தேர்வுசெய்ய மக்கள் தயாராகி விட்டனர். மக்களின் மனநிலையை காங்கிரஸூம், பிற எதிர்க்கட்சிகளும் புரிந்து கொண்டுவிட்டன. இதையடுத்தே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்மீது அக்கட்சிகள் சந்தேகம் எழுப்பத் தொடங்கியுள்ளன. இது மக்கள்தீர்ப்புக்கு எதிரானதாகும்.
பிரதமர் மோடி அரசின் 5 ஆண்டுகால ஆட்சியில், நமது நாட்டின் பொருளாதாரம் முன்னேறியிருப்பதை சர்வதேச பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 5 ஆண்டுகளில் 1.20 கோடி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் 2020ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைவருக்கும் சொந்த வீடு கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் என்றார் ராஜ்நாத் சிங்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...