மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளைச்சேர்ந்த அரசியல் தலைவர்களும் தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் முதன்மையாக பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவ்வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா தொகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
21 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் நம் நாடு ‘ஆபரேஷன் சக்தி’ அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி காட்டியது. அதற்காக கடுமையாக உழைத்த, நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளுக்கு நான் தலை வணங்குகிறேன். 1998-ஆம் ஆண்டு நடந்த இந்தவரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்துக்கு தேசத்தின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட வலிமையான அரசியல் நிலைப்பாடுதான் முக்கிய காரணம்.
அதுபோன்ற வலிமையான அரசியல் நிலைப்பாடு கொண்டவர்கள் நம் நாட்டில் ஏராளம். ஆனால், வாஜ்பாயிக்கு முந்தைய அரசுகளுக்கு அதற்கான திராணி இல்லை. தேசப் பாதுகாப்பு முக்கிய என நினைப்பவர்களால் தான் இது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவங்கள் சாத்தியமாகும். அப்போதுதான் அணுஆயுதச் சோதனைகள் மேற்கொள்ளும் தைரியம் இருக்கும்.
இந்நிலையில், எதிர்கட்சிகள் அனைத்தும் எனது சாதிகுறித்து அறிய மிகவும் ஆவலுடன் உள்ளன. இப்போது நான் கூறுகிறேன், எனக்கு ஒரேயொரு சாதிதான். அது இந்நாட்டைச் சேர்ந்த அனைத்து ஏழைகளின் சாதிதான் என்னுடையதும். ஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதிதான் என் சாதியும் என்று தெரிவித்தார்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.