தனி நபர் ஒருவரை மட்டுமே சார்ந்து பாஜக இயங்கிய தில்லை; அது கருத்தியலை அடிப்படையாக கொண்டது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்
பா.ஜ.க மீது காங்கிரஸ் வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, அது மோடி என்ற ஒருதனிமனிதரைச் சுற்றியே செயல்படுகிறது என்பதுதான்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பா.ஜ.க மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி விளக்கமளித்திருக்கிறார். டெல்லியில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியவர், `பா.ஜ.க, கடந்த காலங்களில் வாஜ்பாய் அல்லது அத்வானியின் கட்சியாக என்றுமே இருந்ததில்லை. அதேபோல் தற்போது மோடி அல்லது அமித்ஷாவின் கட்சியாக இருந்ததில்லை. பா.ஜ.க என்பது கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது.
ஒருதனிநபரை முன்னிறுத்தும் அல்லது அவரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சி அல்ல பா.ஜ.க. கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பா.ஜ.கவில் என்றுமே குடும்ப ஆட்சிஇருக்காது. மோடியை மையமாக வைத்தே பா.ஜ.க செயல்படுகிறது என்று கூறுவது தவறானது. கட்சியின் நாடாளுமன்றக் குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது.
ஒருகட்சி வலிமையானதாக இருந்து, அதன் தலைவர் பலவீனமானவராக இருந்தால் தேர்தலில் வெல்லமுடியாது. அதேபோலத்தான் தலைவர் வலிமையான வராக இருந்து கட்சி பலவீனமாக இருந்தாலும் வெற்றிகிட்டாது. மக்கள் மத்தியில் ஒரு தலைவர் செல்வாக்கானவாராக இருந்தால், அவரது பெயர் முன்னிலையில் வரும் என்பது இயற்கையானது தான்” என்று கூறியிருக்கிறார் நிதின்கட்கரி.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.