நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம்

மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்குவரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி டில்லியில், பா.ஜ., தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பண்டிகைபோல், கிரிக்கெட் போல், தேர்தலும் திருவிழா போல் நடக்கிறது. ஜனநாயகத்தை நாம் இணைந்து கொண்டாடுவோம். தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவி யதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 2 தேர்தலின்போது, பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. மத்தியில் வலிமையான அரசு அமையும்போது, பிரிமியர் லீக் கிரிக்கெட், பள்ளி தேர்வுகள் போன்றவை அமைதியாக நடந்தன. நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இரண்டாவது முறையாக எங்களது அரசு முழுமெஜாரிட்டியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர உள்ளது.

மக்கள் ஏகோபித்த ஆதரவு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டுமக்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். தேஜ கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் விருப்பப்படுகின்றனர். பலபகுதிகளில் பிரசாரத்திற்கு சென்றபோது, 5 ஆண்டு ஆட்சிக்கு நன்றிசொல்லும் வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம். கடந்த தேர்தலில் பா.ஜ.க,வுக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழந்தனர். 2014 தேர்தலைவிட இந்ததேர்தல் பிரசாரம் பெரியளவில் இருந்தது.இந்தபிரசாரத்தில், என்னுடைய ஒரு கூட்டம்கூட ரத்து செய்யப்பட வில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட மக்கள் மனதளவில் தயாராக இருந்தனர். என்னை ஆசிர்வதித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்ததேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.நாட்டின் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு பிரதமர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...