மம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ

ஒருகட்டத்தில் மமதா பானர்ஜியின் வலதுகரமாக திகழ்ந்த வரும், நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜகவிற்கு மகத்தான வெற்றியை தேடித்தந்ததில் முக்கிய பங்காற்றிய வருமான முகுல்ராயின் மகன், சுப்ரன்ஷூ ராயை 6 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்வதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்முடிவில் மேற்குவங்காளத்தில் இரண்டாவது கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, 40க்கும் அதிகமான வாக்கு சதவீதத்துடன் 18 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடந்தமுறை வெறும் 2 தொகுதிகளை மட்டுமே பெற்ற பாஜக, அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சிவைத்தியம் அளித்து மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

தோல்வியால் துவண்டு போயிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைமையை மேலும் உசுப்பிவிடும் வகையில் அக்கட்சியின் பிஜ்பூர் தொகுதி எம்.எல்.ஏவான சுப்ரன்ஷூராய் பாஜகவை போற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜக பக்கம் சாய்ந்த முன்னாள் எம்.பி முகுல் ராயின் மகன் ஆவார்.

“எனது தந்தையை நினைத்து பெருமை யடைகிறேன். அவர் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகியபோது, லட்சக் கணக்கான முகுல் ராய்களை எங்களால் உருவாக்க முடியும் என கேலி செய்தார்கள், ஆனால் திரிணாமுல் காங்கிரஸை உருவாக்கிய அதே கைகளால் அவர் இன்று கட்சியை உடைத்தெறிந்துவிட்டார். ஒட்டுமொத்த மாநிலத்திலும் சாணக்கியராக வலம் வருகிறார்” என்றார் சுப்ரன்ஷூ.

மேலும் 12 தொகுதிகளை இழந்திருப்பது சாதாரணமானது அல்ல, திரிணாமுல் காங்கிரஸ் இதுகுறித்து செவிசாய்க்க வேண்டும் என்றும் சுப்ரன்ஷூ குறிப்பிட்டார்.

பிஜ்பூர் தொகுதியின் மண்ணின் மைந்தன் நான், அதேபோல தான் என் தந்தையும், என் தந்தையிடம் நான் தோல்வியடைந்துள்ளேன். நான் என்னால் முடிந்ததை கட்சிக்காக முயற்சித்தேன், இருப்பினும் மக்கள் என் தந்தையை தேர்ந்தெடுத்து விட்டனர் என சுப்ரன்ஷூ கூறினார்.

 

இதுகுறித்து பேசிய அவர், என்னால் இனி நிம்மதியாக மூச்சுவிட முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்பலர் மூச்சுத் திணறலில் உள்ளனர். என்னைப் போலவே பலரும் பிஜேபியில் சேர்வர், என்று கூறி இருக்கிறார். என் மீது ஜோடிக்கப் பட்ட குற்றவழக்குகள் போட வாய்ப்புள்ளது அல்லது என்மீது தாக்குதல் கூட நடத்தப்படலாம் என என் தந்தை எச்சரித்துள்ளார். இதனால் அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பிஜேபியில் இணைய உள்ளேன். எனக்கு இந்தகட்சியில் உரியமரியாதை இல்லை. அதனால் புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கிறேன். தற்போது மேற்கு வங்காளத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதைமட்டும் விரும்புகிறே என்றார்  .

இவரைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் சிலர் சேர உள்ளதாக தெரிகிறது.

One response to “மம்தாவுக்கு முதல் அடி தாவினார் ஒரு எம்.எல்.ஏ”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...