அரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்

அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகள், நீட்தேர்வில் 605 மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2019-20-ம் ஆண்டுக்கான நீட்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதிநடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் எழுதினா். இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அரசு பள்ளியில் படித்த தையல்தொழிலாளியின் மகளான ஜீவிதா, இத்தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

சென்னையை அடுத்த அனகா புத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர் செல்வம் என்பவரின் மகள்தான் ஜீவிதா. பன்னீர்செல்வத்துக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 3 மகள்களையும் அனகா புத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கவைத்தார். இதில் ஜீவிதாகடந்த 2015-ம் ஆண்டு, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றார். இதைத் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் 1,161 மதிப்பெண்கள் பெற்றார்.

மருத்துவராக விரும்பிய ஜீவிதா, பிளஸ் 2 படிக்கும் போதே நீட் தேர்வுக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டார். இதற்காக சில மாதங்கள் டியூஷனுக்கு சென்ற இவர், அதன்பிறகு ஃபீஸ்கட்ட பணம் இல்லாததால் வீட்டில் இருந்தபடி சொந்த முயற்சியில் நீட்தேர்வுக்கு படித்தார். நூலகத்தில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்து நீட்தேர்வுக்கு இவர் தயாரானார்.

இந்நிலையில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்துள்ள ஜீவிதா, அகில இந்திய அளவில் 6,678-வது இடத்தையும், ஓபிசி பிரிவில் 2,318-வது இடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் இவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரி விக்கின்றனர். இதனிடையே நீட்தேர்வில் ஜீவிதா வெற்றி பெற்றாலும் கட்டணம் செலுத்த என்ன செய்வது என குடும்பம் தவித்து வருகிறது.

இதுகுறித்து ஜீவிதா கூறும்போது, “எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எங்கள் அப்பா ஒருதையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில்வரும் வருமானத்தில் படிக்க வைத்தார். ஏழை குடும்பத்தில் பிறந்ததால் மருத்துவராக முடியுமா? என பலநாட்கள் நினைத்துள்ளேன். என் அப்பா, அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். இதன் விளைவாக நான் நீட் தேர்வில் தேர்ச்சியடைந் துள்ளேன்” என்றார்.

ஜீவிதாவின் தாயார் பவானி கூறும்போது, “சிறு வயதுமுதலே மருத்துவராக வேண்டும் என்று ஜீவிதா அடிக்கடி கூறுவார். அதற்குநான், ‘நன்றாகப் படித்தால் மருத்துவர் ஆகலாம். மற்றபடி அதற்காக எங்களால் செலவுசெய்ய முடியாது’ என்று கூறிவந்தேன். இதை வைராக்கியமாக கொண்டு ஜீவிதா நல்ல முறையில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனிடையே அவரது மருத்துவ படிப்புக்கு உதவுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நீட்தேர்வில் வெற்றிபெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டணசெலவை ஏற்றுக்கொள்கிறேன்.

ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்… மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டார். இந்த நிலையில், நீட்தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நீட்தேர்வு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை அரசியல்கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவராது என கூறினார். தமிழிசை செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஜீவிதா, அரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வில் வெற்றிபெறலாம் என்றும், மாணவர்கள் தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...