லண்டனில் உள்ள பிரியங்கா காந்தி கணவரின் 2 அரண்மனை வீடுகள் உட்பட 8 வீடுகள் முடங்குகிறது !! துபாயிலிருந்து கடத்தப் பட்ட பணம் காட்டிக் கொடுத்தது!!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கம் என்ற இடத்தில் உள்ள சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும், அது தொடர்பாக அவர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து அவரிடம் இதுவரை 11 தடவை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி உள்ளது. விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார். அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அவர் வெளிநாடு செல்வதற்கும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இருப்பினும்,அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ராபர்ட் வதேராசெல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இதற்கிடையே, லண்டன் உள்பட இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் ராபர்ட் வதேராவுக்கு வேறு சில சொத்துக்கள் இருப்பதாகவும் அமலாக்கத்துறைக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. குறிப்பாக, ரூ.45 கோடி மதிப்புள்ள அரண்மனை போன்ற வீடு, அதேபோல ரூ.36 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் 6 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் ஆகியவற்றின் உரிமையாளர் ராபர்ட் வதேராதான் என்றும் சந்தேகிக்கிறது.
இவற்றை வாங்க சைப்ரஸ், துபாய் ஆகிய நாடுகளில் இருந்து ரகசிய பண பரிமாற்றம் நடந்ததையும் கண்டுபிடித்துள்ளது. அந்த பணம் கடத்தல்தான் இந்த சொத்துக்கள் வாங்கியதற்கான ஆதாரம் என கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை இங்கிலாந்து அரசுக்கு அளித்துள்ளதாகவும், விரைவில் அந்த சொத்துக்கள் முடக்கப்பட்டு விடும் எனவும் கூறப்படுகிறது…
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |