பாஜகவில் ஜூலை மாதம் 6-ஆம் தேதி முதல் புதியஉறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாகவும், 2.20 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் கட்சியின் துணைத் தலைவர் சிவராஜ்சிங் சௌஹான் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக் கிழமை கூறியதாவது:
பாஜகவில் தற்போது 11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். புதிதாக 20 சதவீதம் அதாவது 2.20 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. குறிப்பாக மேற்குவங்கம், ஜம்மு-காஷ்மீர், கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட பட்டுள்ளது. சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்த தினமான வரும் ஜூலை 6-ம் தேதி முதல் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கப்படும் என்றார் அவர்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |