மேற்குவங்க காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்துவைத்த பாலம் அதற்குள் இடிந்து விழுந்துவிட்டது என கூறும் பதிவு புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் லைக் செய்திருக்கிறார். இந்தபதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவுகளில் இடம் பெற்றிருக்கும் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், இதுவும் வழக்கம் போல காங்கிரஸ் கட்சியின் மோடிக்கு எதிரான அவதூறு என்பதும் தெரிய வருகிறது. புகைப்படத்தில் இடிந்து விழுந்ததாக கூறப்பட்ட பாலம் குஜராத்தில் ஐம்பது ஆண்டுகளுக்குமுன் திறக்கப்பட்டது ஆகும்.
மேற்குவங்க காங்கிஸ் கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில்: நரேந்திர மோடி அறிவித்த திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டு பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ஜாம்நகர்-ஜூனாகர் நெடுங்சாலை பாலம், மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்து விட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தபாலத்தை கட்டமைக்க கற்கள் அதிகளவு பயன்படுத்தப் படுகின்றன. இதுபோன்ற கட்டுமானங்களில் கற்களை பயன்படுத்தும் வழக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி விட்டது. தற்போதைய கட்டுமானங்களில் கான்க்ரீட்தான் பெரும்பாலும் பயன்படுத்த படுகின்றன.
அந்தவகையில் குஜராத் மாநிலத்தில் இடிந்துவிழுந்த பாலத்தை நரேந்திர மோடி மூன்று மாதங்களுக்கு முன் திறந்து வைக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |