உலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந்துள்ளது

இரண்டாம் உலக போருக்கு பின்னர் இந்தியா -ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந் துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ‌தெரிவித்துள்ளார்‌

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்று‌‌ள்ள அவர், ஒசாகா ‌நகரில் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தான் 2014ல் ‌இந்திய பிரதமரானபிறகு ஜப்பான் உடனான நட்பை மேம்படுத்த‌ நல்லவாய்ப்பு கிட்டியதாகக்‌‌ கூறினார். தலை‌ ந‌கரங்கள் மற்றும் தூதர்களைத் தா‌ண்டி ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும், தானும், இருநாடுகள் இடையிலான ராஜாங்க உ‌றவை பொதுமக்களிடம் கொண்டு சென்றிருப்பதாக மோடி கூறினார்.

சுவாமி விவேகானந்தர், ரபீந்திர நாத் தாகூர், மகாத்மா காந்தியடிகள், நேதாஜி‌ சுபாஷ் சந்திரபோஸ்,‌ நீதிபதி ராதா பினோத் பால் போன்ற ஆளுமை நிறைந்த தலைவர்கள் எல்‌லாம் ஜப்பான் உடனான‌ உறவை மேம்படுத்தி வந்துள்ளதாக மோடி குறிப்பிட்டார்.

ஜப்பானுக்கும் இந்தி‌யாவுக்கும் இடையிலான உறவு இன்றுநேற்று வந்தது அல்ல, பல நூற்றாண்டுகளைக் கடந்தது என்றும் பிரதமர் தெரி்வித்தார்.

ஏழு மாதங்களுக்கு முன்ன‌ர்தான் ஜப்பான் வந்திருந்தபோது, ஜப்பான் மக்கள் சின்சோ அபேவுக்கு மீண்டும் வெற்றியைத் ‌தந்ததாக மோடி கூறி‌னார். உலகின் மிகப்பெரிய ஜனநாய‌க நாடான இந்தியாவில் நடைபெற்றதேர்தலில், ஒருபிரதம ‌சேவகனாக நாட்டு ம‌க்கள் தன் மீது அதீத நம்பிக்கை வை‌த்து‌ அபரிமிதமான வெற்‌றியை‌ தந்ததாக மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்தியாவும்‌ ஜப்பானும் இணைந்து புல்லட்‌ரயில் தயாரிக்கும் என்றும் பிரத‌ம‌ர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியர்கள் கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசுவதற்கு முன்பாக அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மக்கள் பிரதமரை கண்டதும், “ஜெய் ஸ்ரீராம்..ஜெய் ஸ்ரீராம்” என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும் “வந்தேமாதரம்” என்ற கோஷமும் எழுப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...