வங்கிகளின் வாராக் கடன் குறைந்தது

வங்கிகளின் வாராக் கடன் கடந்த நிதியாண்டை விட ரூ.1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

வங்கிகளின் வாராக்கடன் நிலை குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக செவ்வாய்க் கிழமை பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைப்பதற்காக, பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளித்தது, நிதி மோசடியாளர்கள் மீண்டும் கடன்வாங்காத வகையில் தடை விதித்தது, கடன் வழங்குபவர் மற்றும் பெறுபவர் இடையேயான உறவில் மாற்றங்கள் கொண்டுவந்தது, திவாலான நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் அடங்கிய தகவல்கள்களை சேகரிக்கும்வகையில் மத்திய நிதி மோசடியாளர்கள் ஆவணம்’ பராமரிக்கப் படுகிறது. அதில் உள்ள தகவல்கள் அவ்வப்போது வங்கிகளுக்கு அனுப்பப்படும். அதன்மூலம் நிதிமோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் கடன் வழங்குவது தடுக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்துள்ளது. ரிசர்வ்வங்கி அளித்த தரவின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி, வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு ரூ.10.36 லட்சம் கோடியாக புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், வாராக் கடன் அளவு ரூ. 1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக தற்போது உள்ளது.ரூ. 50 கோடிக்கு மேல் கடன்வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது, நிதி மோசடியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ. 4.01 லட்சம் கோடி வாராக்கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.

ரூ. 250 கோடிக்கு அதிகமாக கடன்பெறும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாராக்கடனை வசூலிப்பதற்காக, ஒருமுறை தீர்வு’ திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடன்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுகின்றன.

கடந்த 2018-19 நிதியாண்டில் அதிகளவில் மோசடி நடைபெற்ற வங்கிகள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து கோட்டக் மகிந்திரா வங்கியும், அதைத்தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட்வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...