ஏழைகள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்த வர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
நகரத்தார் வர்த்தகசபை சார்பாக உலகளாவிய நகரத்தார் வணிக மாநாடு சென்னை கிண்டியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன் கோயில்களுக்காகவும், பாரம்பரியத்தை காப்பதற்காக காலம்காலமாக பாடுபட்டு வருபவர்கள் நகரத்தார்கள் என தெரிவித்தார். பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் வைத்துகொண்டு செல்வது ஆங்கிலேயர்களின் வழக்கம் என்பதால் இந்தஆண்டு பட்ஜெட் ஆவணங்களை சூட்கேசில் கொண்டுசெல்லவில்லை என கூறினார்.
நரேந்திர மோடி அரசு ஊழல் அரசல்ல என்றும் தங்கள் அரசு சூட்கேஸ் அரசு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சுதந்தர மடைந்ததில் இருந்து உரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம் என ஆதங்கப்பட்ட நிர்மலா சீதாராமன், ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்தவர்களுக்கு இம்முறை கூடுதல்வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் பேசியவர், மத்திய அரசு இந்தியை திணிக்க நினைக்கவில்லை தமிழை வளர்க்கிறது எனவும் குறிப்பிட்டார்.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |