பாஜக.,வுக்கும் ஜம்மு காஷ்மீருக்கும் இடையில் ஒரு தீர்க்கமான தொடர்பு உண்டு . இந்த இணைப்பை ஏற்படுத்தியவர் பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆவர் . இவர் இவருடைய தந்தை கல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கறிஞராகவும், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் ருந்தார். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் மற்றும் பெங்காலி இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பின்னர் சட்டம் பயின்றார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக தன்னுடைய 33 வயதில் பதவி வகித்தார். 1929ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். மாநில தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1939ஆம் ஆண்டு ஹிந்து மகாசபாவில் இணைந்தார். அகில பாரதிய ஹிந்து மகாசபாவின் தலைவராக 1943ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்துக்கு பின் நேருவின் அமைச்சரவையில் 15 ஆகஸ்டு 1947 முதல் 6 ஏப்ரல் 1950 வரை வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.
ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த சியாமாபிரசாத் முகர்ஜி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் நிலைப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸிலிருந்து விலகினார். அதைத்தொடர்ந்து பாரதிய ஜனசங்கத்தை நிறுவினார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தேச ஒருமைப்பாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும், 370-ஆவது சட்டப் பிரிவு தேசநலனுக்கு எதிரானது என்றும் தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தார். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார்.
1952-ஆம் ஆண்டு தனது கருத்தை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசினார். ஒரு நாட்டுக்கு இரு அரசியலமைப்புச் சட்டங்கள், இரு கொடிகள் இருக்கக் கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது.
பிற இந்தியக் குடிமக்கள் காஷ்மீரில் நிரந்தரமாகக் குடியேறக் கூடாது; காஷ்மீர் செல்லும்போது அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த 1953-ஆம் ஆண்டு சியாமா பிரசாத், காஷ்மீர் சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபடமுயன்றார். காஷ்மீர் செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், அதைமீறி காஷ்மீர்செல்ல முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தடுப்புக்காவலில் இருந்தபோதே அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் அவரது தியாகத்துக்கு இன்று ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று சியாமா பிரசாத் முகர்ஜி வலியுறுத்தியதை இப்போதைய மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |