இந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத காரியம்; சீனா முன்னாள் வெளியுறவு செயலாளர்

இந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத காரியம்..சீனா முன்னாள் வெளியுறவு செயலாளர்!, இப்பொழுது காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று சீனா மற்றும் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைத்தது. இந்த இரண்டு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐநா வில் விசாரணை நடத்தியது போல், வருங்காலத்தில் ஹாங்ஹாங், திபெத் பிரச்சனையை மையமாக வைத்து இந்தியா, சீனாவிற்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது ஏன் நம் தலைவர்களுக்கு தெரியவில்லை?

இந்தியாவை வீழ்த்துவது இனி நடக்காத காரியம். இந்தியாவை பகைத்து கொண்டால் சீனாவின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் ஆட்டம் கண்டு விடும். இப்போது சீனாவின் பொருளாதாரம் மிகவும் கீழே வந்து கொண்டு இருக்கிறது, இந்த நிலையில் இந்தியாவை எதிர்த்தால் நமக்கு நல்லது அல்ல.இன்றைய நிலையில் உலகில் எந்த நாடும் இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

உதாரணமாக, சீனாவை டோக்லாம் சிக்கலில் மோடி அரசு எதிர்கொண்டது; பாகிஸ்தான் உட்பட எந்த நாடும் நமக்கு, ஆதரவு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்.

டோக்லாம் விஷயத்தில் நாம் இந்தியாவை பார்த்து பயந்து பின் வாங்க வில்லை, ஆனால் உலகத்தில் எந்த நாடும் நமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை அமைதி காத்தன.அதே நேரத்தில் இந்தியாவுக்கு ஜப்பான், இஸ்ரேல் வெளிப்படையாக முழு ஆதரவு தெரிவித்தது.

இந்தியாவுடன் பகையை வளர்த்தால், அவர்கள் தைவான், திபெத், ஹாங்காங் பிரச்சினையையும் கிளப்புவார்கள், ஏற்கனவே ஹாங்காங் பிரச்னையில் ஒரு தீப்பொறி கிடைக்காதா என்று ஏங்கி கிடக்கிறது உலகம்.போராட்டகாரர்களும் இதையே எதிர்பார்க்கின்றனர்.இந்தியா ஒரு பேட்டி கொடுத்தால் தீப்புடித்து எரியும். ஏற்கனவே அமெரிக்கா நம்முடன் நீண்ட பகையாக உள்ளது.

உலக நாடுகளில் எந்த நாடும் நம்முடன் நட்பாக இல்லை.நட்பாக இல்லா விடடாலும் பரவாயில்லை அனைத்து நாடுகளும் எதிரிகளாகவும் உள்ளன. பாகிஸ்தானை மட்டும் நட்பு என்று பேசி கொண்டு அலைகிறீர்கள். இதனால் நமக்கு என்ன லாபம்?

ஆனால் இந்தியாவை பொறுத்தவரை உலகில் உள்ள அனைத்து நாடுகளிடமும் நட்பாக உள்ளது.

அமெரிக்கா இஸ்ரேல் சொல்லை மீறாது.. இஸ்ரேல் இந்தியா சொல்லை மீறாது..

ரஷியா இந்தியாவை எதிர்க்காது. அதற்கு இந்தியாவை எதிர்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

ஜப்பான் நமது எதிரி.இந்தியாவின் மிக சிறந்த நண்பன்..பிரான்ஸ் இந்தியாவின் நண்பன்..

மேலும் ஜெர்மன், பிரிட்டன் கண்டிப்பாக இந்தியாவை எதிர்க்காது.

மேலும் கொஞ்சம் பலத்தோடு இருக்கும் வளைகுடா நாடுகள் இந்தியாவை எதிர்க்கவே எதிர்க்காது.

இப்படி இருக்கும் நிலையில், இந்தியாவை எதிர்த்து நீங்கள் எந்த தீர்மானம் ஜ.நா.வில் நீங்கள் கொண்டு வந்தாலும் அது ஜெயிக்க வாய்ப்பே இல்லை.

இதே நிலை நீடித்தால் பாகிஸ்தானை 4 துண்டாக பிரித்து விடும் இந்தியா.இன்று பாகிஸ்தானை ஆதரிக்க ஆள் கிடையாது. துணைக்கும் யாரும் இல்லை.

நீங்கள்(சீனா) நினைப்பது போல் இன்று இந்தியா உங்களை கண்டு பயப்படாது. ஏனென்றால் அங்குள்ள தலைமையின் பலம் அதிகம்.
இதை டோக்லாம் விஷயத்திலும், மசூத் அசார் விஷயத்திலும் உலகம் பார்த்து விட்டது.

நீங்கள், உங்களிடம் ஆயுதங்கள் அதிகம் உள்ளன, நம்மிடம் அணு ஆயுதம் உள்ளது,நாங்கள் வல்லரசு, அதனால் இந்தியா எங்களிடம் பணிந்து தான் போகணும் என்று நினைக்கலாம்.ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்?

இப்போதுள்ள நிலையில் பரப்பரளவை வைத்து வல்லரசு என்பதை ஏற்று கொள்ள முடியாது, சீனாவிடம் இருக்கும் அணைத்து ஆயுதங்களும் அவர்களிடமும் (இந்தியா)இருக்கிறது.

இன்னும் சொல்ல போனால், அவர்களிடம் உங்களை விட நவீன ஆயுதங்கள் உள்ளன. காரணம்? பெரிய நாடுகளிடம் இருந்து நவீன ஆயுதங்கள் நிறைய கொள்முதல் செய்கிறது இந்தியா. அதனால் பலவகையான ஆயுதங்கள் இந்தியாவிடம் உள்ளன.

மேலும், இப்போது உள்ள நவீன உலகத்தில் இன்றைய ஆயுதங்கள் எதற்கும் பயன்படாது, ஏனென்றால் அவர்களிடமும் அணு ஆயுதம் உள்ளது. நீங்கள் 10 அணு குண்டு போட்டு இந்தியாவை அழிக்கலாம் என்று நினைத்தால்?அவர்கள் 15 அணுகுண்டை போட்டு சீனாவை அழித்து விடுவார்கள். இது தானே இன்றைய நிலை?

இன்றைய உலகத்தில் எந்த நாடு, எப்போது, எந்த ஆயுதத்தை உபயோகிக்கிறார்கள் என்ற ராஜ தந்திரம் தான் இப்போது வெற்றி பெரும்.அது அந்த நாட்டின் ராஜா தந்திரத்தை பொறுத்தது..கொடூரமான ஆயுதங்கள் எல்லோரிடமும் உள்ளன.

உலக வல்லரசான அமெரிக்காவே வட கொரியா என்ற சின்ன நாட்டிடம் பின் வாங்குகிறது ஏன் ? ஒரு அணுகுண்டு, ஒரே ஒரு அணுகுண்டு போட்டால் போட்டது தானே,என்ன செய்ய முடியும்? அதன் பிறகு வட கொரியாவை அழிக்கலாம் அது இரண்டாவது.இருந்தாலும் அமெரிக்காவில் பாதி அழிந்து விடுமே?

இதுதான் இன்றைய உலகம்..அதனால் மிகவும் கவனமாக கையாளுங்கள் அது தான் நம் சீனாவுக்கு நல்லது !!!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...