ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்தி ராணி முகர்ஜி, கடந்த ஆண்டு சிபிஐ.,யிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, அப்ரூவராக மாறிய இந்திராணிமுகர்ஜி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், “நானும், தனது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2006 ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தோம். அப்போது அவர், தனதுமகன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கும்படியும், கார்த்தியின் தொழிலுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டார். டில்லி ஹயத் ஓட்டலில் கார்த்தியை சந்தித்தோம். அவர் எங்களிடம் 1 மில்லியன் டாலர் லஞ்சமாக கேட்டார்” என கூறினார்.
இந்திரா முகர்ஜியின் இந்த வாக்குமூலம்தான் சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்திரா முகர்ஜி மற்றும் கார்த்தியின் திட்டப்படி, கார்த்திக்கு சொந்தமான ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு ஆதரவாக 700,000 டாலர் (ரூ.3.10 கோடி) மதிப்பிலான 4 இன்வாய்ஸ் தயாரித்துள்ளனர். இதன்மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக வெளிநாட்டு அந்நியமுதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் பங்குகள் 46 சதவீதமாக உயர்ந்தது. ரூ.4.62 கோடிக்கு பதிலாக சட்டவிரோதமாக ரூ.305 கோடி பிரீமியமாக பெறப்பட்டுள்ளதாகவும் இந்திராணி கூறி இருந்தார்.
இந்திராணியின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தியும் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, நிதியமைச்சக ஆவணங்கள் மற்றும் இந்திராணியின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே சிதம்பரம் பதிலளித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சிதம்பரம்மீது ஏதோ ஐ என் எக்ஸ் கேஸ் மட்டும்தான் இருக்கிறதா நினைச்சுராதீங்க…மொத்தம் எட்டு கேஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காலாவதி கலா
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |