இந்திய நாட்டின் முதுகெலும்பாய் இருப்பது பொதுத்துறை வங்கிகள். ஆனால், சமிப காலங்களில் இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் தங்கள் கொடுத்த கடன்கள் எல்லாம் வாராக்கடனாய் மாறின. உதாரணமாக, நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு 2018-ன் இறுதி காலாண்டில் 2,416 கோடி ரூபாய் வாராக் கடனால் நஷ்டம் ஏற்பட்டது.
முதலீட்டார்கள் வங்கியில் வாங்கிய கடன்களுக்கு வட்டிக்கட்ட முடியாமல் தள்ளாடின. வங்கியும் முதலீட்டாளர்களுக்கு கடன்கொடுப்பதை கொஞ்ச கொஞ்சமாய் தவிர்த்து வந்தன. வங்கிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கு இடையிலான நம்பிக்கை தேய்மானம் அடைந்தது .
இந்த சூழ் நிலையை கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்களைகளை எடுத்துவந்திருந்தது. அதன் ஒருபகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதிரடி முடிவுகளை அறிவித்தார்.
அந்த அறிவுப்புகளில் முக்கிய சாரம்சங்களாக இருப்பது இந்தியாவில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக குறைத்திருப்பதே.
தொழில் துறையை ஊக்குவிக்க ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்துறை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வங்கித் துறையிலும் சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
8 பொதுத் துறை வங்கிகள் ரிசர்வ்வங்கிக்கு இணையாக வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து உள்ளன. வங்கிக்கடனை கட்டிமுடித்த 15 நாட்களுக்குள் கடன்பத்திரங்கள் திருப்பித் தரப்படும். கடன் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வங்கிகள் அறிக்கை தந்துள்ளன.
இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த சிலஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக வளர்த்து எடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பலவேறு பொதுத்துறைவங்கிகள் இணைக்கபடுகின்றன.
பஞ்சாப் நேஷனல்வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகள் இணைக்கப் படுகின்றன. ரூ.17.5 லட்சம்கோடி ரூபாய் வணிகத்துடன் எஸ்பிஐக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியாக இது உருவாகும்.
இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கியுடன் இணைக்கப்படுகிறது. இது நாட்டின் ஏழாவது பொதுத் துறை வங்கியாக இது இருக்கும்.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிஆகிய மூன்றும் இணைக்கப்படுகிறது. இந்தவங்கிகளை இணைப்பதன் மூலம் பெருமளவு வாராக்கடன் குறையும். மேலும், நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய வங்கியாக இது மாறும்.
கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி இணைக்கப் படுவதன் மூலம் ரூ.15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நான்காவது பெரிய பொதுத் துறை வங்கியாக இதுமாறும்.
வாராக்கடன்களின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. ரூ75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு வாராக் கடன் குறைந்துள்ளது. மேலும், ரூ. 250 கோடி கடன்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும்.
கடந்த மார்ச் 2019 காலாண்டில் மொத்த 18 வங்கியில் 6 வங்கிகள் மட்டுமே லாபம் ஈட்டின. தற்போது 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபத்தில் இயங்குகின்றன. வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை.
2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். வங்கிகள் இணைக்கப்படும் பட்சத்தில், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள்கொடுக்கும் கடன் அளவு அதிகரிக்கும்.
நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர் காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர்பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21% அதிகரித்துள்ளது. சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க கடன்வசதி வழங்கப்பட்டு வருகிறது இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |