மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த மாநில பாஜக தலைவர்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். எனினும், அவர் கூட்டணிக் கட்சியான சிவசேனையின் தலைவர்களை சந்திக்கவில்லை.
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அந்தமாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் , மகா ஜனாதேஷ் யாத்திரையை இரண்டு கட்டங்களாக மேற்கொண்டார். அதன் நிறைவையொட்டி சோலாப்பூரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார்.
அதன்பின் மும்பை வந்த அமித் ஷா, மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள முதல்வர் ஃபட்னவீஸின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார். மாநில பாஜக தலைவர்கள் சிலரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, மும்பையில் உள்ள பிரபலமான சித்திவிநாயகர் கோயிலுக்கு அமித்ஷா சென்று சுவாமி தரிசனம் செய்தார்.இதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறுகையில், முதல்வர் ஃபட்னவீஸ், மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்ட தலைவர்களை அமித்ஷா சோலாப்பூரில் ஞாயிற்றுக் கிழமை சந்தித்தார்.
அங்கு இரவு தங்கியவர், ஃபட்னவீஸுடன் திங்கள்கிழமை மும்பைவந்து மேலும் சில கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்றார்.சிலதிட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 7ஆம் தேதி மகாராஷ்டிரத்துக்கு வரும்போது மேலும் சில எதிர்க் கட்சித் தலைவர்கள் பாஜகவில் இணைவர் என்று கூறப்படுகிறது.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |