ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடிவழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார்சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.
ஐ.என்எக்ஸ் மீடியா மோசடிவழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை தடுக்கும் பொருட்டு, அவரது வழக்கறிஞர் குழுவினர் தீவிரமுயற்சி செய்தனர். இதற்காக, சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்குசெல்ல தயாராக உள்ளதாகவும் நீதிபதி முறையிட்டனர்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்கும்பொருட்டு சிதம்பரம் தாக்கல்செய்த முன்ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, எந்தநேரத்திலும், அவரை அமலாக்கத்துறை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை, கைதுசெய்வதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், சிறப்பு கோர்ட் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னால், இரண்டுவாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, ஜாமினில் விடுவது அல்லது நீதிமன்ற காவலில் வைப்பது .
ஆனால், சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ” வழக்கின் தன்மையை கருத்தில்கொண்டும், குற்றத்தின் வகையை ஆராய்ந்தும், ஆரம்பகட்ட நிலையில் விசாரணை உள்ளதால், குற்றவாளியை நீதிமன்ற காவலில்வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
உடனடியாக, சிதம்பரம் தரப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரம்,திஹார் சிறைக்கு கண்ணாடியை கொண்டுசெல்லவும், குறிப்பிட்ட மருத்துவ வசதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னாள் உள்துறை அமைச்சரான சிதம்பரத்திற்கு, பாதுகாப்பை கருத்தில்கொண்டு கழிப்பறையுடன் கூடிய தனி அறையை ஒதுகக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளை நீதிபதி ஏற்றுகொண்டார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |