வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான அரசு

கடந்த 100 நாட்களில், வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான அரசாக மத்தியஅரசு இருந்தது என பிரதமர் மோடி கூறினார்.

அரியானா மாநிலம் ரோதக்கில் நடந்தபேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: யார் மக்களின் ஆசியைபெற போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. கடந்த சிலமாதங்களில் ரோதக் வருவது இது மூன்றாவது முறை ஆகும். இந்தமுறை, உங்களின் ஆதரவை கேட்டு வந்துள்ளேன். ரோதக், நான் கேட்டதைவிட அதிகமாக கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் பிரச்னை ஆகட்டும், தண்ணீர் பிரச்னை ஆகட்டும், நாட்டு மக்கள் அனைவரும், பிரச்னைகளுக்கு புதிய தீர்வைதான் தேடுகின்றனர்.நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க 130 கோடி மக்களும் தீர்வு காண முன்வர வேண்டும்

கடந்த 100 நாட்களில், வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்காக அரசு தீவிரமாக செயல் பட்டது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த பார்லி தொடரில், அதிகளவு மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இது கடந்த 60 ஆண்டுகளை காட்டிலும் அதிகம்.கடந்த 100 நாட்களில் எடுக்கப்பட்ட தைரியமான முடிவுகள், வருங்காலத்தில் பலன்களை அளிக்கதுவங்கும். உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் உயர்வுக்கான திட்டங்கள் வரதுவங்கியுள்ளன. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 7 ம் தேதி அதிகாலை 1.50 மணியளவில், சந்திராயன்-2 நிலவில் தரையிறங்குவதை பார்க்க , நாட்டுமக்கள் அனைவரும் டிவி முன் அமர்ந்திருந்தனர். அந்த 100 நிமிடத்தில், எவ்வாறு, நாட்டுமக்கள் ஒன்று பட்டுள்ளனர் என்பதை நான் பார்த்தேன். விளையாட்டு வீரர்களின் உற்சாகத்தை பற்றி பேசுவது போல், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் உற்சாகத்தை பற்றிபேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...