பூமியைப் புனிதமாக மதிக்கும் கலாச் சாரத்தை கொண்டவர்கள் நாம்

பூமியைப் புனிதமாக மதிக்கும் கலாச் சாரத்தை கொண்டவர்கள் நாம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பாலைவனமாதலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஐ.நா. உடன்படிக்கை, பாரிஸ்நகரில் 1994-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதில், 196 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இந்த உடன் படிக்கையில் 1996ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. இந்தகூட்டமைப்பின் தலைமை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் நிலையில், சீனா வசமிருந்து தற்போது இந்தியா 2 ஆண்டுகளுக்கு தலைமைப்பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்நிலையில், நிலம் பாலைவனமாதலை கட்டுப்படுத்துவது, கால நிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு மற்றும் உயரியல் பன்முகத் தன்மை 14-வது ஐ.நா.சபையில் மாநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் , நில மேலாண்மை தொடர்பான உலகளாவிய சொற்பொழிவை அதிகரிக்கும் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் நேற்று பதிவிட்டார்.

இந்நிலையில், ஐ.நா.மாநாட்டில் பங்கேற்றுபேசிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றங்களால் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் ஏற்படுகிறது .  விளைநிலம் பாலையாக மாறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உறுதியேற்கவேண்டும் , நீடித்த வளர்ச்சியை உறுதிச் செய்வதற்கு நிலத்தின் வளத்தைப்பாதுகாப்பது அவசியமானதாகும் . விளைநிலம் பாலை வனமாகும் பிரச்சனையால் உலகின் 3-ல் இருபங்கு நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் வனப்பரப்பு 2015-ல் இருந்து 2017-ம் ஆண்டு வரை 20 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது , காடுவளர்ப்புத் திட்டங்களுக்காக இந்திய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி அளவுக்கு மத்திய அரசு வழங்கிவுள்ளது. மேலும் உலகமே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட் பைசொல்லும் நேரம் வந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன் என்றார்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...